பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/223

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவஞ்சைக்களம் 20種。 வெறுத்தேன்மண் வாழ்க்கையை விட்டொழித்தேன்; விளங்கும்குழைக் காதுடை வேதியனே ! இறுத்தாய்இலங் கைக்கிறை யாயவனைத் தலைபத்தொடு தோள்பல அற்றுவிழக் கறுத்தரய்கடல் கஞ்சமு துண்டுகண்டம் கடுகப்பிர மன்தலை ஐந்திலும் ஒன்று அறுத்தாய்கட லங்கரை மேல்மகோதை அணியார்பொழில் அஞ்சைக் களத்தப்பனே!" என்பது அப்பதிகத்தில் ஒரு பாட்டு. அவருடைய விருப்பத்தை அறிந்த சிவபெருமான் தேவர்களிடம், நம்பியாரூரனை வெள்ளே யானையின் மேல் அழைத்து வாருங்கள்' என்று பணித்தான். அவர்கள் திருவஞ்சைக்களம் சென்று திருக்கோயில் வாயிலில் நின்றனர். சுந்தரர் கோயிலிலிருந்து: வெளியே வரவும், தேவர்கள் இறைவன் பணித்த படியைச் சொன்னர்கள். அவர் சேரமான் பெருமாளே நினைத்தார். பின்பு யானையின்மேல் இவர்ந்து தேவர் களுடன் திருக்கயிலேக்குப் புறப்பட்டுவிட்டார். இந்தச் செய்தியைக் கேள்வியுற்ற சேரமான்' பெருமாள் உடனே தம் குதிரையின்மேல் ஏறி மிக விரைவாகத் திருக்கோயிலை நோக்கி வந்தார். சுந்தரர் வான்வழியே போவதை உணர்ந்து தம் குதிரையின் காதில் பஞ்சாட்சர மந்திரத்தை ஒத. அது வானில் பறந்து செல்லத் தொடங்கியது. விரைவாகச் சென்று: சுந்தரமூர்த்தி நாயனுர் ஏறிச் சென்ற யானையை வலங்’ கொண்டு அதற்குமுன் செல்லலாயிற்று. கயிலேயை நோக்கிப் போய்க்கொண்டிருந்த சுந்தரர், 'தான் என முன் படைத்தான்” என்று ஒரு பதிகம் பாடினர். அதில் இறைவன் வெள்ளே