பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/224

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

202 வாருங்கள் பார்க்கலாம் யானையை அனுப்பித் தம்மை அழைத்துக்கொண்ட பேரருளைச் சிறப்பித்துப் பாடினர். "இந்திரன் மால்பிரமன் எழிலார்மிகு தேவரெல்லாம் வந்தெதிர் கொள்ள என்ன மத்தயான அருள்புரிந்து மந்திர மாமுனிவர் இவன் ஆர்என எம்பெருமான் கந்தமர் ஊரன் என்ருன் நொடித்தான்மலை உத்தமனே’’ என்பது ஒரு பாட்டு. கயிலாய மலைக்கு நொடித்தான் மலே என்பது ஒரு பெயர். -, - கயிலையை அடைந்த பிறகு யானையினின்றும் இழிந்து சிவபிரான் திருமுன் சென்று விழுந்து பணிந் தார் சுந்தரர். பல காலமாகப் பிரிந்த பிரிவினல் ஆராமை மீதுார நின்ருர் ஊரனே !! வந்தாயா? என்று இறைவன் அன்புடன் கேட்டருளினுன். சுந்தரருடன் சென்ற சேரமான் பெருமாள் உள்ளே புக முடியாமல் வாயிலில் தடையுண்டு நின்ருர், சுந்தரமூர்த்தி சுவாமிகள் அவர் அங்ங்னம் நிற்பதை விண்ணப்பித்துக்கொள்ள, அம் மன்னரை :யும் அழைத்துவரப் பணித்தான் கயிலைக் கடவுள். சேரமான் வந்தவுடன் இறைவன் புன்முறுவல் பூத்த படியே, "நாம் அழையாமல் இங்கே நீ ஏன் வந்தாய்?" என்று கேட்டான். அரசர் கைகுவித்து, ‘எம்பெருமானே, அடியேன் நம்பியாரூரரைப் போற்றியபடியே அவர் யானைக்கு முன்னே வந்தேன். தேவரீர் திருவருள் என்னை