பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவஞ்சைக்களம் 203 இங்கே அழைத்து வந்துவிட்டது. மற்ருெரு காரிய மும் உண்டு. அடியேன் திருக்கயிலாய உலா என்று ஒன்றைப் பாடியிருக்கிறேன். அதைத் திருச்செவி கார்த்தியருள வேண்டும். வன்ருெண்டருடைய கூட்டுறவு எனக்குக் கிடைக்கும்படிசெய்த திருவருளே என்னென்று வாழ்த்துவேன்! என் பாசம் அகன்றது” என்று அன்பு பொங்கக் கூறிஞர், இறைவன், *உலாவைச் சொல்லுக’ என்று கட்டளையிடச் சேர மான் அதை அங்கே அரங்கேற்றினர். அதனைக் கேட்டுத் திருவுள்ளம் மகிழ்ந்த இறைவன், நீ ஆலாலசுந்தரனுடன் சேர்ந்து இருவரும் நம் கண நாதர்களாக இருப்பீர்களாக ' என்று அருள் செய் தான். - சுந்தரமூர்த்தி சுவாமிகள் தாம் அருளிய, "தான் என முன் படைத்தான்' என்ற திருப்பதிகத்தைச் சமுத்திரராஜனுகிய வருணனிடம் அளித்துத் திரு வஞ்சைக்களத்திற் சேர்ப்பிக்கும்படி சொன்னர். அந்தப் பதிகத்தின் இறுதிப்பாட்டில் இந்தக் குறிப்பு இருக்கிறது. "ஊழிதோ றுழிமுற்றும் உயர்பொன் கொடித் தான்மக்லயைச் சூழ்இசை இன்கரும்பின் சுவைகாவல ஊரன்சொன்ன ஏழிசை இன்றமிழால் இசைக்தேத்திய பத்திவையும் ஆழி கடலரையா - அஞ்சையப்பர்க் கறிவிப்பதே' என்பது அந்தப் பாட்டு, சேரமான்பெருமாள் பாடிய திருக்கயிலாய ஞான -உலாவை அரங்கேற்றும்போது கேட்ட சாத்தர்