பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/226

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204 வாருங்கள் பார்க்கலாம் (சாஸ்தா) அதை வாங்கிக்கொண்டு வந்து திருப்பிட ஆர் என்ற இடத்தில் வெளிப்படுத்தினர். சுந்தரர் பழையபடியே சிவபெருமானுக்கு அணு க் கத் தொண்டு புரியும் ஆலால சுந்தரராகி எல்லேயற்ற இன்ப வாழ்வு பெற்ருர். - பெரிய புராணத்தின் இறுதிப் பகுதியாகிய வெள்ளானேச் சருக்கத்தில் இந்த வரலாறு வருகிறது. சுந்தரர் வெள்ளே யானேயின்மேல் கைலாயம் சென்ற கதையைச் சொல்வதல்ை அதற்கு வெள்ளானேச் சருக்கம் என்ற பெயர் வந்தது. அதனேடு பெரிய புராணம் நிறைவடைகிறது. சுந்தரமூர்த்தி சுவாமி' களேயே காப்பியத் தலைவராக வைத்துப் பாடிய நூலா தலின் இப்படிப்பொருத்தமாக முடித்தார் சேக்கிழார். 2 - கெ டுங்கோளுர்ப் பகவதியைத் தரிசித்துக் கொண்டு திரும்புகையில் மணி பன்னிரண்டாகிவிட் டது. நல்ல வெயில், நாங்கள் கொண்டுபோயிருந்த புளியோரையையும் தயிருஞ்சாதத்தையும் சாப்பிட் டோம். அப்போது இருந்த பசியில் அவை அமுத மாக இருந்தன. இப்போது கழியில் தண்ணிர் உயர்ந்திருக்கிறது; திருவஞ்சிக்குளம் போகலாம்” என்று படகுக்காரர் சொன்னர். நிரம்பின வயிற்ருேடு நாங்கள் புறப்பட்டோம். முன்னே சொன்னபடி குறு. கலாக இருந்த ஒரு சிறு கழியின் வழியே படகு சென் றது. திருவஞ்சைக்களத்தை அடைந்து ஊருக்குள் சென்ருேம். கொடுங்கோளுரிலிருந்து திருவஞ்சைக். களத்துக்குப் பஸ் போகிறது. சுகமாகப் படகிலே போவதை விட்டு, அந்தப் பஸ்ஸில் போகவேண்டிய நிலை எங்களுக்கு இல்லை. -