பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/227

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவஞ்சைக்களம் 205 இப்போது திருவஞ்சைக்களம் சிறிய கிராமமாக இருக்கிறது, திருவஞ்சிக்குளம் என்றுதான் யாவரும் அதனை வழங்குகிருர்கள். களத்தைக் குளமாக்கினர் களோ, குளந்தான் களமாயிற்ருே தெரியவில்லை. எர்ணுகுளம் என்ற பெயர்கூட எர்ணுகளமாக இருக் கலாமோ என்னவோ ! கொடுங்கோளுர், திருவஞ்சிக்குளம் இரண்டும் மூன்று நான்கு மைல் இடையிட்டிருந்தாலும் பழங் காலத்தில் இவை வஞ்சிமாநகரத்தின் பகுதிகளாகவே இருந்திருக்க வேண்டும். அந்த ஊரில் சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பற்றித் தெரித்தவர்கள் மிகவும் குறைவு. ரெயில் உத்தியோகத்திலிருந்து ஒய்வு பெற்றிருக்கும் ராகவையர் என்ற தமிழ்ப் பிராமணர் அங்கே இருக் கிருர். அவர் கோயிலில் புராணம் சொல்கிறவராம். புராண சாஸ்திரி என்று அடையாளம் சொன்னல் அவரை அடையலாம். கோயிலைப்பற்றி யாரிடம் விசாரிப்பது என்று வழியிலே கண்டவர்களைக் கேட்டபோது ராகவ ஐயரிடம் அனுப்பினர்கள் அவர் கள். கோயிலுக்கு அருகில் அவர் குடியிருக்கிருர். நல்ல வெயிலில் அவரைத் தேடிக்கொண்டு போளுேம். முதலில் குளிர்ந்த நீர் கொடுத்தார். அப் பால் குளிர்ச்சியாகப் பேசினர், ஆண்டுதோறும் கோயம்புத்துரிலிருந்து அன்பர்கள் வந்து இங்கே வழிபட்டுப் போவதாகச் சொன்னர். தமக்குத் தெரிந்த செய்திகளையெல்லாம் கூறுவதாக அவர் அபயம் அளித்தார். - “முதலில் இங்கே ஒரு பர்லாங்கு தூரத்தில் உள்ள சேரமான் பறம்பைப் போய்ப் பார்த்து வாருங் கள்' என்ருர் ராகவையர். -