பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/229

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவஞ்சைக்க்ளம் - 207" இருந்தது. அப்போது கோயில் சாத்தியிருந்தாலும் தர்மகர்த்தர்கள் எங்களுக்காகத் திறந்து விட்டார் d:#8ts, கோயில் வாசலில் எர்ணுகுளம் முதலிய இடங். களில் உள்ளது போன்ற கோபுரந்தான் இருக்கிறது. அடிப்படை கருங்கல்லால் இரு ப் ப து ஒரு வித்தியாசம். அதில் சில சிற்ப வடிவங்களும் இருக் கின்றன. சேரமான் பெருமாள் குதிரையின்மேல் ஏறிக்கொண்டிருக்கும் நிலையைப் புலப்படுத்தும் சிற்பமும், சுந்தரர் யானயேறிச் செல்வதைக் காட்டும் சிற்பமும், வேறு சில உருவங்களும் இருக் கின்றன. - கோயிலுக்குள்ளே புகுந்தவுடன் முதலில் காட்சி அளிப்பது ஏழு அடுக்குள்ள பெரிய தீபஸ்தம்பம். அது முழுவதும் வெண்கலத்தால் அமைந்தது. “இங்கே சேரமான் பெருமாள் நாயனர் வந்து தரிசித்ததற்கு ஏதாவது அடையாளம் உண்டோ?’ என்று ராகவையரைக் கேட்டேன். . "இங்கே அவர் பூஜை செய்த நடராஜா இருக் கிருர். இந்தக் கோயிலில் மாசி மாதம் கிருஷ்ண பட்சத்தில் உல்லவம் நடைபெறுகிறது. அமாவாசை யன்று பூர்த்தியாகிறது. ஏழாம் நாள் உல்ஸ்வத்தில் சேரமான் பறம்பில் பரை வைத்துவிட்டு வருவார் கள்.' & அவர் மலேயாளிகள் சொல்வதைப் போல உத்ஸ் வத்தை உல்ஸ்வம் என்றே சொன்னர். "பரை வைப்பதா? அப்படி என்ருல் ?? "கூடையில் அரிசி, பழம், வெற்றிலே பாக்கு, தேங்காய் எல்லாம் கொண்டுபோய் வைப்பார்கள்.”