பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/230

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

* 2:08 வாருங்கள் பார்க்கலாம் எதற்காக?” "இங்கே நடக்கும் உல்ஸ்வத்துக்குச் சேரமான் பெருமாள் பண்டங்களே அனுப்பி வந்தார். அது பரம்பரை பரம்பரையாக நடந்துவந்தது. இப்போது மகாராஜாவுக்குப் பதிலாக ஒரு பரிசாரகர் பரை வைத்துவிட்டு வருகிருர்’ என்று விளக்கினர் புராண சாஸ்திரி. மற்ருெரு செய்தியையும் அவர் சொன்னர். சேரமான் பெருமாள் நாயனர் தம் காலத்தில் சிதம்பரத்திலிருந்து சில உருத்திர கணிகையரை அழைத்துவந்து இந்தக் கோயிலில் திருத்தொண்டு செய்யும்படி ஏற்பாடு செய்தாராம். மூன்று விட்டார் பல காலமாக இருந்துவந்தார்கள்ாம். இப்போது ஒரு விடு இல்லே. இரண்டு வீட்டார் மட்டும் இருக்கிருர் கள். - . அைவர்கள் சிதம்பரத்திலிருந்து வந்தவர்கள் என்று எப்படித் தெரியும்?’ என்று கேட்டேன். "அவர்களே சொல்லிக் கொள்கிருர்கள். அது மட்டும் அல்ல. பூஜையின்போது சுவாமிக்கு விளக் கெடுக்கிருர்கள் அல்லவா? மலையாளத்தில் மற்ற இடங்களில் எல்லாம் ஆண்கள் எடுப்பதுதான் வழக்கம். இங்கே ஆண்கள் எடுப்பதோடு தமிழ் நாட்டைப் போலப் பெண்களும் எடுப்பார்கள்,' அப்போது எனக்குத் தமிழ்நாட்டுக் கோயிலில் தீபமும் தட்டும் எடுக்கும் உரிமை தளிப் பெண்டு களாகிய உருத்திரகணிகையருக்கு இரு ந் த து நினைவுக்கு வந்தது. அட்டதிக் கும் புகழும் ஆலவாய்ச் சொக்கருக்குத் தட்ட தெடுக்கும் தளியிலாள்