பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/232

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை இல்லா அப்பன் என்ன ஆச்சரியம் ! ஒரு காலத்தில் தமிழ் நாட் டோடு தமிழ் நாடாகச் சேர்ந்திருந்த பகுதி இன்று வேறு மொழி வழங்கும் நாடாகிவிட்டது. சேரமான் பெருமாள் நாயனர் இருந்து அரசாண்ட இடத்தில் மருந்துக்கு ஓரிரண்டு தமிழ்க் குடும்பங்கள் இருக்கின் றன. மலேயாளத்தில் குழைத்த தமிழை அவர்கள் பேசுகிருர்கள். சேரமான் பெருமாள் சிறந்த தமிழ்ப் புலமை உடையவர். அவர் இயற்றிய பொன் வண்ணத்தந்தாதி, திருவாரூர் மும்ம ணிக் கோவை, திருக்கைலாய ஞான உலா என்ற மூன்று நூல்களும் பதினேராந் திருமுறையில் சேர்ந்திருக்கின்றன. அவ ருடைய வாக்கானது பழுத்த தமிழ் வாக்கு. அவர் இயற்றிய உலாவை ஆதி உலா என்றும் சொல் வார்கள். முதல் முதலாக உலா என்ற பிரபந்தம் பாடினவர் சேரமான் பெருமாள் நாயனரே. அவர் மாத்திரம் புலமை பெற்று மற்றவர்கள் தமிழைப் புறக்கணித்தார்கள் என்று சொல்ல முடி யாது. அவருடைய புலமை மற்றவர்களுக்கு இல்லா மல் இருக்கலாம். ஆயினும் ஓரளவு தமிழ்ப் புலமை யுள்ள அறிஞர்களும் தமிழன்பு உடையவர்களும் அக்காலத்தில் அவரைச் சூழ இருந்து கொண்டிருந் தார்கள் என்று சொல்வது பிழை ஆகாது. ஒன்ப தாவது நூற்ருண்டில் அங்கே இருந்த தமிழ்வளம் நாளடைவில் மறைந்து போயிற்று. திருவஞ்சைக்களம் தேவாரம் பெற்ற தலம். ஆல்ை அந்தத் தேவாரம் அங்கே வழங்கவில்லை,