பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/233

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை இல்லா அப்பன் 211 தமிழ் நாட்டிலேயே தேவாரம் பெற்ற தலங்கள் சில கவனிப்பாரற்றுக் கிடக்கும்போது இதை ஒரு குறை. யாகச் சொல்வதற்கு இல்லை. தேவாரம் வழங்கா விட்டாலும் கோயில் நன்ருகத் தான் இருக்கிறது. ஆனல் சுந்தரமூர்த்தி சுவாமிகளைப் பற்றி அங்கே யாருக்கும் தெரியாது. சேரமான் பெருமாளேப்பற்றிக் கேட்டால் ஆளுக்கு ஒன்று சொல்லுகிருர்கள். புராணமும் அல்லாமல் சரித்திரமும் அல்லாமல் ஒரு புத்தகம் மலேயாளத்தில் இருக்கிறதாம். அதற்குக் கேரளோல்பத்தி' என்று பெயராம். அதில் உள்ள செய்திகளைத்தான் சொல்கிருர்களேயன்றி வேறு ஆதாரமுள்ளதாக ஏதும் சொல்வதில்லை. - - சேரமான் பெருமாள் மெக்காவுக்குப் போய். இஸ்லாம் மதத்தில் சேர்ந்துவிட்டார்' என்று ஒருவர் ஓர் அணுக்குண்டைப் போட்டார். "அவருடன் போனவர்களில் சிலர் திரும்பி வந்தார்கள்; இஸ்லாமி யர்களாக வந்நார்கள். அவர்களே கேரளத்தில் வாழும் மாப்பிள்ளைமார்கள்” என்று அவர் சொன்னர். கொல்லம் ஆண்டே சேரமான் பெருமாளாலே ஏற்பட்டதுதான்' என்றர். அவரிடம் பேசிக் கொண்டே இருந்தால் புற்றீசல்களைப் போலப் புதிய புதிய விசித்திரச் செய்திகள் கிளம்பும் என்ற அச்சத் தால், சுந்தரமூர்த்தி சுவாமிகள் சேரமான் பெருமாள் நாயனருக்குத் தோழராக இருந்தாரே, அதைப்பற்றி உங்கள் கேரளோல்பத்தி ஏதாவது சொல்கிறதோ ?? என்று கேட்டேன். - "அப்ப்டி ஒன்றும் இல்லையே! என்ருர் அவர். சேரமான் பெருமாள் அறுபத்துமூன்று நாயன் மார்களில் ஒருவர். அவர் திருக்கைலாயத்துக்குச்