பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

14 வாருங்கள் பார்க்கலாம் முலேப் பால் வழங்கும் காட்சி நிகழும். விழாவுக்கு வந்தவர்கள், பாத்திரங்களில் பாலைக் கொணர்ந்து ஞானசம்பந்தருக்கு நிவேதனம் செய்யச் செய்து வாங்கிச் செல்வார்கள். அந்தப் பிரசாதத்தை ஞானப் பாலாகவே எண்ணி உண்டு இன்புறுவார் கள். இந்த நாட்டில் பக்தியினல் அன்பர்கள் மேற் கொள்ளும் பாவனையின் உயர்வை என்னவென்று சொல்வது! . தோனியுரவில் ஓர் ஊரில் உள்ளவர்களெல்லாம் சேர்ந்து ஒரு கோயிலேக் கட்டினர்கள். அவரவர்கள் தங்கள் தங்க ளால் இயன்ற தொண்டுகளைப் புரிந்தார்கள். பணக் காரர்கள் பணத்தைக் கொடுத்தார்கள், தொழிலாளர் கள் வேலே செய்தார்கள். சிற்பக் கலையில் வல்லவர் கள் கோயிலில் அங்கங்கே சிற்ப உருவங்களை வடித் தார்கள். அந்த ஊரில் ஒரு முதிய சிற்பி இருந்தான். அவனுக்கும் கோயிலில் ஏதாவது செய்ய வேண்டு மென்ற ஆசை உண்டாயிற்று. "எனக்கும் ஏதாவது வேலை கொடுங்கள்’ என்ருன். "நீ கிழவன்; உன்னுல் என்ன செய்யமுடியும்?” என்று அந்த நிர்வாகி அலட்சியமாகக் கேட்டார். ஏதோ என்னல் முடிந்ததைச் செய்கிறேன். ஏதாவது மூலையைக் காட்டுங்கள்; அங்கே எதை யாவது செதுக்குகிறேன்” என்று கெஞ்சின்ை. கிழவனுடைய வேண்டுகோளுக்கு இரங்கி அவர் கோயிலில் இருட்டாக இருந்த ஒரிடத்தில்