பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோணிபுரம் 15 உள்ள கம்பத்தைக் காட்டி, அதில் எதையாவது செய்துகொள்' என்று சொன்னுர். கிழவன் அந்த இடமாவது கிடைத்ததே என்ற மகிழ்ச்சியோடு வேலைசெய்யத் தொடங்கினன். அவனுக்கு வயசு ஆயிற்றே ஒழியச் சிற்பத் திறனில் தளர்ச்சி உண்டாகவில்லே. மெல்ல அந்தத் தூணில் ஓர் அழகிய உருவத்தைக் கோலம் செய்யத் தொடங் கின்ை. ஆர்வத்தோடும் பக்தியோடும் உருவைச் செதுக்கினன். நாளுக்கு நாள் அவனுக்கு ஊக்கம் மிகுந்தது. உருவமும் அழகு பெற்று வந்தது. ஒரு நாள் வெளியூரிலிருந்து கலே நயம் கானும் ஒருவர் வந்தார் கோயிலில் பல சிற்பிகள் அமைத்து வரும் சிற்ப உருவங்களேயெல்லாம் கண்டு இன்புற எண்ணிக் கோயிலுக்குள் புகுந்தார். முகப்பில் பல சிற்பிகள் வேலே செய்துகொண்டிருந்தனர். அவர் களுடைய உழைப்பில் உருவாகி வந்த சிற்பங்களைக் கண்டு வியந்தார். முன்பக்கத்திலும் தூண்களிலும் சிற்ப வடிவங்கள் பல முற்றுப்பெற்றிருந்தன. சில முடிவடையும் நிலேயில் இருந்தன. ரசிகர் எல்லாவற் றையும் பார்த்து மகிழ்ந்தார். பிறகு கோயிலச் சுற்றிக்கொண்டு வந்தார். ஒரு மூலையில் உள்ள தூணில் கிழச் சிற்பி வேலை செய்து கொண்டிருந்தான். அவன் செதுக்கிய உருவம் பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. சிறிது நகாசு வேலை செய்து கொண்டிருந்தான். சற்றே இருண்ட அந்த மூலக்கும் ரசிகர் சென்றர். சிறிது நேரம் நின்ற பிறகுதான் தூண் தெரிந்தது; தூணில் உருவாகிய வடிவமும் தெரிந்தது. கண்களே ச் சுருக்கியும்