பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/240

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

218 வாருங்கள் பார்க்கலாம் செய்திருக்கிருர்கள். திருமுடியணிந்த கோலத்தில், சேர அரசரும், கொண்டையணிந்த கோலத்தில் சுந்தரரும் அருகருகே கிழக்குப் பார்த்து நிற்கின்றனர். ஒன்றரை அடிஉயரமுள்ளவிக்கிரகங்கள். ஆடிமாதம் சுவாதி நட்சத்திரத்தில் இங்கே அபிஷேகம் முதலியன நடைபெறுமாம். அந்த நாளே சுந்தரர் திருக்கயிலேக்கு எழுந்தருளிய நாள். தமிழ் நாட்டி லிருந்து சில அன்பர்கள் வந்து அன்று குருபூசையை நடத்தி வருகிறர்கள். பெரியபுராணம் முழுவதற்கும். உரை எழுதிய பெரியார் சிவக்கவிமணி திரு சி. கே. சுப்பிரமணிய முதலியாரவர்களே தமிழ் நாட் டு மக்களுக்கு இத்தலத்தை நன்ருக அறிமுகப்படுத்தித் தரிசித்து வழிபடும்படி செய்தார்கள் என்று கேள்வி. யுற்றேன். . திருவாரூரில் சுந்தரமூர்ந்திக்குத் தனிக் கோயில் இருப்பதைப் பார்த்திருக்கிறேன். அங்கே சேரமான் பெருமாளுக்கும் விக்கிரகமும் வழிபாடும் உண்டு. இங்கே அவர் பிறந்த இடத்தில் அவரை அடையாளம் தெரிந்து கொள்வதற்கே ஆள் குறைவு. காரணம் என்ன? பக்தி குறைவா? இல்லே, இல்லை. நம்மைக் காட்டிலும் பக்தியிலும் நம்பிக்கையிலும் அங்குள்ள வர்கள் சிறந்தவர்களென்றே சொல்ல வேண்டும். ஆலுைம் நாயன்மார்களைப் பற்றியும் தேவாரம் முதலிய திருமுறைகளைப் பற்றியும் அவர்களுக்கு ஒன்றுமே தெரியாது. அங்கே தமிழ் நிலவாததுதான் எல்லாவற்றுக்கும் மூலகாரணம். . சிறிது நேரம் அந்தச் சந்நிதியிலே நின்று வழி. பட்டேன். உள் பிராகாரத்தில் தென்மேற்கில் பள்ளி யறை இருக்கிறது. வட கீழ்ப்புறத்தில் நடராஜர்