பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/239

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை இல்லா அப்பன் 217 மூாததகள், வாகன விசேஷங்கள் எல்லாம் இருக்கும் என்று அப்போதெல்லாம் கற்பனை செய்து கொண்டி ருந்தேன். சுவாமிக்கே உற்சவமூர்த்தி இல்லை. வாகனங்கள் இல்லே. நாயனுருக்கு எங்கே இருக்கப் போகின்றன ? கழறிற்றறிவாராகிய சேர மான் பெருமாள் நாயனர் செங்கோலோச்சிய இடம் ஆயிற்றே! அவருக்காவது சிறப்புச் செய்யக்கூடாதா? அவரும் சுந்தரரும் எந்த நிலையில் எழுந்தருளியிருக்கிருர் களோ என்ற எண்ணந்தான் இப்போது உண்டா யிற்று. எப்படியெல்லாம் இருப்பார்களோ என்ற அதி சய உணர்ச்சி இல்லை. - - உள்ளே புகுந்தோம். 'மற்றச் சந்நிதிகளைப் பிறகு பார்த்துக் கொள்ளலாம் ; முதலில் சுந்தரர் சந்நிதிக்கும் சேரமான் பெருமாள் நாயனுர் சந்நிதிக் கும் போகலாம்' என்றேன். . "இரண்டு பேரும் ஒரே இடத்தில்தான் இருக் .கிருர்கள்’ என்ருர்கள். - "அப்படியா? தோழர்களாகிய அவ்விருவரையும் :பிரிக்காமல் ஒன்ருகச் சேர்த்து வைத்திருப்பது நல்லது தான்" என்று சொல்லிக்கொண்டே அந்தச் சந்நிதி யை அடைந்தேன். . தமிழ் மறந்த மலைநாட்டில் தம்மை இன்ன ரென்றே உணராதமக்களிடையே திருவஞ்சைக்களக் கோயில் உட்பிராகாரத்தில் தென் மேற்கு மூலையில் புவிமன்னராகிய சேரமான் பெருமாள் நாயனரும் கவிமன்னராகிய சுந்தரரும் காட்சியளித்தனர். உற்சவ மூர்த்திகளேயே அஷ்டபந்தனம் சாத்திப் பிரதிஷ்டை