பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/238

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 வாருங்கள் பார்க்க்லாம் வெளிப்பிராகாரத்தில் மேல்பக்கம் சில சந்நிதிகள் இருக்கின்றன. துர்க்கையும் முருகனும் அங்கே எழுந்தருளியிருக்கிருர்கள். மேற்குத் திருவாசலில் ஒரு மரக்கொட்டகை இருக்கிறது. அதை ஆனேப்பந்தல் என்று சொல்கிருர்கள். மலேயாளத்தில் கோயில் விழா என்ருல் ஆனேயை அலங்கரித்துப் பவனிவரச் செய்வது வழக்கம் ஆனயைக் கொண்டு வந்து நிறுத்தும் இடமாதலால் ஆனேப் பந்தல் என்று பெயர் வந்தது. அது பத்து வருஷங்களுக்கு முன் கட்டப் பெற்றது. கொல்லம் ஆண்டு 1122 - இல் அதனே எடுத்ததாக ஒரு குறிப்பு அவ்விடத்தில் இருக்கிறது. - - . . . . . . . வெளிப்பிராகாரத்தின் வடப் பக்கத்தில் இந்தத் தலத்துக்குரிய விருட்சம் இருக்கிறது. ஒவ்வொரு தலத்துக்கும் ஒவ்வொரு தலவிருட்சம் இருப்பதைத் தமிழ் நாட்டில் பெரும்பாலான திருப்பதிகளில் காண லாம். திருவஞ்சைக் களத் தி ன் தலவிருட்சம் கொன்றை. அதைப் பார்க்கையில் பல ஆண்டு களாக இருப்பதென்று தோற்றத்தால் தெரிகிறது, மரத்திற்கு அடியில் மேடை போட்டிருக்கிருர்கள். ஒருவாறு வெளிப் பிராகாரத்தைத் தரிசித்துக் கொண்டு மேற்கே உள்ள வாயில் வழியே உள் பிரா காரத்துக்குச் சென்றேன். சேரமான் பெருமாள் நாயனரும் சுந்தரமூர்த்தி நாயனரும் எழுந்தருளி யிருக்கும் சந்நிதியைக் காண வேண்டும் என்னும் ஆர்வம் என்ன உந்தியது. திருவஞ்சைக்களத் துக்குச் சென்று வந்தவர்கள் இந்த இரண்டு நாயன் மார்களும் அங்கே எழுந்தருளியிருக்கிருர்கள் என்று சொல்லியதுண்டு. மூல விக்கிரகங்கள். உற்சவ