பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/237

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை இல்லா, அப்பன் 245 இடமாக முன்பு இருந்திருக்கலாம். அந்தச் சந்நிதிக்குப் பிறகு அந்தத் தெற்குப் பிராகாரத்தில் சாஸ்தா சந்நிதி ஒன்று இருக்கிறது. கோயிலும் வாயி லும் இருந்தாலும் மேலே விதானம் இல்லாமல் சூரிய னும் வருணனும் நேரே தம்மைப் பூசிக்கும் நிலையில் அவர் எழுந்தருளியிருக்கிருர். 'திருக்கைலாயத்தில் சேரமான் பாடிய பாடல்களே உலகத்துக்கு எடுத்துக் கொண்டு வந்த சாஸ்தா இவர்” என்று புராண சாஸ்திரி கூறினர். பெரியபுராணத்தில், சேரர் காவலர் விண்ணப்பம் செய்தஅத் திருவுலாப் புறம்அன்று சாரல் வெள்ளியங் கயிலையிற் கேட்டமா சாத்தளுர் தரித்திந்தப் பாரில் வேதியர் திருப்பிட ஆர்தனில் வெளிப்படப் பகர்ந்தெங்கும் கார வேலைசூழ் உலகினில் விளங்கிட காட்டினர் கலத்தாலே என்ற பாட்டின் வாயிலாக, "திருக்கயிலாயத்தில் சேரமான் பெருமாள் நாயனர் அரங்கேற்றிய திருக்கயிலாய ஞான உலாவைக் கேட்ட மாசாத்தனர் அதனைத் தாங்கி வந்து அந்தணர் வாழும் திருப்பிடவூர் என்ற ஊரில் வெளியிட்டு உலகமெங்கும் பரவும்படி செய்தார்’ எ ன் று தெரிவிக்கிருர். அத்தகைய உபகாரம் செய்த சாத்தனராகிய சாஸ்தாவுக்குச் சேரமான் பெருமாள் ஊரில் ஒரு சந்நிதி இருப்பது பொருத்தந்தானே ? சாத்தனர், ஐயனர், சாஸ்தா, ஹரிஹர புத்திரன் என்பவை ஐயப்பனுக்குரிய பெயர்கள்.