பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/236

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

214 வாருங்கள் பார்க்கலாம் அப்போது எனக்கு ஒரு கதை நினைவுக்கு வந்தது. தமிழ் நாட்டில் ஒருவர் ஒரு பையனைக் கோயிலுக்கு அழைத்துச் சென்ருர், தென்முகக் கடவுளைப் பையனுக்குக் காட்டி, "இ ந் த ச் சுவாமிக்குத் தட்சிணுமூர்த்தி என்று பெயர்’ என்ருர். பையன் கொஞ்சம் யோசித்தான். “தெக்கணு மூர்த்திதானே?"என்றுகேட்டான். "ஆமாம்" என்ருர் பெரியவர். சரி, இனிமேல் மற்றச் சுவாமிகளை எனக்குச் சொல்ல வேண்டாம். எனக்கே தெரிந்து விட்டது' என்று பையன் உற்சாகமாகச் சொன்னன். பெரியவருக்கு ஆச்சரியமாக இருந்தது. "உனக்கு எப்படியப்பா தெரியும் ? என்று கேட்டார். "இது என்ன பெரிய ரகசியமா ? இதோ இவர் தெற்கே பார்த்த சாமி, தெக்கனமூர்த்தி ; வடக்கே பார்த்த சாமி வடக்கணு மூர்த்தி ; கிழக்கே பார்த்தசாமி கிழக் களுமூர்த்தி; மேற்கே பார்த்த சாமி மேற்கணுமூர்த்தி' என்ருனும், அந்தக் கூரிய அறிவுடைய பிள்ளை யாண்டான் ! அவன்கூடத் தட்சிணுமூர்த்தி தெற்கு நோக்கி யவர் என்பதை உணர்ந்திருக்கிருன். இங்கேயோ-? அந்தச் சந்நிதிக்குள் நுழைந்தேன், அங்கே மற்ருேர் அதிசயம் காத்திருந்தது. கல்லால மரத்தின் கீழ் அமர்ந்திருக்கும் தட்சிணுமூர்த்தியை அங்கே காணவில்லை. சிவலிங்கந்தான் இருந்தது! கிழக்கே பார்த்த சிவலிங்கத்துக்கும் தட்சிணுமூர்த்திக்கும் வித்தியாசம் தெரியாத மக்களின் நடுவே அஞ்சை யப்பர் வீற்றிருக்கிருர்! அந்த இடம் தெற்கே நோக்கிய சந்நிதியாக, தட்சிணுமூர்த்தி:எழுந்தருளிய