பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

அம்மை இல்லா அப்பன் 213 புறத்திலே ஒரு பிராகாரமும் உள்ளே ஒரு 'பிரர்காரமும் இரண்டுக்கும் நடுவிலே இடைகழியைப் போலக் குறுகலான ஒரு சுற்றுப் பிராகாரமும் இருக் கின்றன. கீழ்ப்புறத்தில் ஒரு வாசலும் மேல்புறத்தில் ஒரு வாசலும் உள்ளன. சுவாமி கிழக்கு நோக்கி எழுந் தருளியிருக்கிருர் - வெளிப்பிராகாரத்தில் ஒவ்வொரு மூலையிலும் தீர்த்தம் இருக்கிறது. கிழக்கு வாசலில் புகுந்த வுடன் தீபஸ்தம்பமும் கொடி மரமும் காட்சியளிக் கின்றன. சுவரெல்லாம் மரத்தால் ஆனவை. சுவர் முழுவதும் இரும்பு அகல் விளக்குகளே வரிசை வரிசையாக அடித்திருக்கிருர்கள். இந்த அமைப்பைத் தமிழ்நாட்டில் காண முடியாது. விழாக் காலங் களில் நாற்புறச் சுவர்களிலும் உள்ள விளக்குகளே ஏற்றிவிட்டால் எங்கும் சுடர்விளக்கு மயமாக இருக் கும். அத்தகைய காட்சியை எர்ணுகுளத்தில் கண் டேன், அத்தனே விளக்குகளையும் ஏற்ற எண்ணெய், திரி எவ்வளவு வேண்டும் என்று நான் நினைக்க வில்லை. அவ்வளவையும் ஏற்ற எ வ் வ ள வு பொறுமை வேண்டும்! என்றுதான் வியப்புற்றேன். வெளிப் பிராகாரத்தில் தெற்கே திரும்பினேன். அங்கே ஒரு சிறிய சந்நிதி இருந்தது. "இது என்ன சந்நிதி?’ என்று கேட்டேன். 'இதுதான் தகூழின மூர்த்தி' என்ருர் உடன் வந்த புராண சாஸ்திரி. "தகூதிளுமூர்த்தியா ? சந்நிதி கிழக்கு நோக்கி கயல்லவா இருக்கிறது ?" என்றேன். - அது என்னவோ தெரியாது. தகூழினமூர்த்தி என்றுதான் எல்லோரும் சொல்கிருர்கள்' என்ருர்.