பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/246

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூர் கதிரவன் தன் வெய்ய சுடர்களை வீசிக் கொண் டிருந்தான். படை பதைக்கும் வெயில். இந்த வெயிலில் மதுரையிலிருந்து காரில்புறப்பட்டேன். திரு. வாதவூருக்குச் சென்று தரிசனம் செய்யத்தான். கிட்டத்தட்டப் பதினறு மைல் தூரம் நம்முடைய வாழ்க்கையைப் போல மேடும் பள்ளமும் குண்டும் குழியும் புழுதியும் கரம்பும் நிறைந்த பாதையில் கார் வந்துகொண்டிருந்தது. மிகவும்புழுக்கமாக இருந்தது. 'திருவாசகத்துக்கு உருகாதார் ஒரு வாசகத்துக்கும் உருகார்’ என்ற பழமொழி நினைவுக்கு வந்தது. “திரு. வாதவூருக்குப் போகும்போதே இவ்வளவு உருக்க மாக இருக்கிறதே அங்கே போய்விட்டால் எப்படி யோ !” என்று உடன் வந்த நண்பர்களிடம் கூறினேன். எப்படியோ திருவாதவூர் வந்து சேர்ந்தோம். வானத்துப் பாஸ்கரன் சுட்டுக் கொண்டிருந்தாலும், அவ்வூரில் மற்ருெரு பாஸ்கரனர் எங்களைக் குளிர்ச்சி யுடன் வரவேற்ருர். சிவதர்ம பாஸ்கரர் என்ற பட்டம் பெற்ற ரீ ம. க. சுந்தரேச பட்டர் திருவாதவூர் உற்ச வத்தில் காப்புக்கட்டிக் கொண்டிருந்தார். எனக்குத் திருவாதவூர்ப் பெருமை முழுவதையும் காட்டிவிடுவ தாகவும் காப்புக்கட்டிக் கொண்டிருக்க வேண்டும். இல்லாவிட்டால் அந்த வெயிலில் என்னுடன் பல இடங்களுக்கு அலேந்துவந்து, 'இது இன்ன தீர்த்தம், இது இன்ன இடம்” என்று சொல்லியதோடு நில்லா மல் வாய்க்கும் வயிற்றுக்கும் இனிய விருந்தையளித்து