பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/253

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூர் 23% என்பது ஓரிடம். வகுளம் என்றது மகிழ மரத்தை வேதநாயகன் என்பது இவ்வூர் இறைவன் திருநாமம். திருமறை நாதர் என்றும் சொல்வதுண்டு. அம்பிகை யின் திருநாமம் ஆரணவல்லி, ஆதர வடியார் முற்றும் அடிபணிந் தேத்தப் போந்து வாதையம் புரத்து கண்ணி மணிச்சிலம் போசை காட்டத் தீதற ஆண்ட எங்தை திருச்சிலம் போசை என்றே ஏதமா முனிவர் தேறி - இசைபடத் துதிக்க லுற்ருர் என்ற பாட்டிலும் இந்தச் சிலம்பொலி வருகிறது. மாணிக்கவாசகர் நடராஜப் பெருமானுடைய சிலம் பொலியைக் கேட்டதாகச் சொல்லும் அ ந் த மண்டபம் இப்போது இடிந்து கிடக்கிறது. அதன் சிற்ப அமைப்பும், கொடுங்கைகளும் அழகாக இருக் கின்றன. . . . மாணிக்கவாசகர் இந்த ஊரில் பிறந்தார். அவருக்கு வாதவூரர் என்ற திருநாமத்தையே தாய் தந்தையர் வைத்தார்கள். இங்கே எழுந்தருளிய இறைவன் பெயரே அது. வாதபுரேசர் என்றும் வழங்கும். வாயு பூசித்த இடமாதலால் இதற்கு வாதபுரம், வாதவூர், சமீரபுரம் என்ற பெயர்கள் வந்தனவாம். இறைவனே இங்கே வழிபட்டமையால் வாயுதேவன் ஆஞ்சநேயனுகிய குமாரனப் பெற்ரு ளும். - உட்பிராகாரத்துக்குள் நுழைந்தேன். மதுரையில் இருப்பதுபோல இங்கே இறைவன் திருக்கோயி