பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/254

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

’230 வாருங்கள் பார்க்கலாம் லுக்குத் தெற்கே அம்பிகையின் கோயில் இருக்கிறது. பெரும்பாலான இடங்களில் சிவபிரானுக்கு இடப் பக்கத்தே அம்மை எழுந்தருளியிருப்பது வழக்கம். யூரீ மீனுட்சியம்மை வலப் பக்கத்தே கோயில் கொன் டெழுந்தருளியிருக்கிருள். திருவாதவூரிலும் வேத நாயகருக்கு வலப்பக்கத்தில் ஆரணவல்லி கோயில் கொண்டெழுந்தருளியிருக்கிருள். இப்படி உள்ள தலங்களில் சக்திக்கு முதன்மை இருக்கும்’ என்று பெரியவர்கள் சொல்வார்கள். வேதநாயகன் தி ரு க் கோ யி லி ல் தென் கிழக்கு மூலையில் உள்ள கிணற்றைக் கபில தீர்த்தம் என்று சொல்கிருர்கள். சகரர்களைத் தம் விழியால் எரித்த கபிலமுனிவர் இங்கே வந்து பூசித்து இந்தத் தீர்த்தத்தை அமைத்ததாகப் புராணம் சொல்கிறது. கபில தீர்த்தம் என்ற பெயரைக் கேட்டவுடன் என் நினைவு சங்க காலத்தில் வாழ்ந்த பெரும் புலவ. ராகிய கபிலரிடம் சென்றது. அதற்குக் காரணம் உண்டு. திருவாதவூர் மாணிக்கவாசகருடைய திரு அவ தாரத்தலம் என்ற பெருமையை உடையதோடு, அவர் தோன்றுவதற்கு முன்பிருந்தே இதற்கு மற்ருெரு சிறப்பும் இருந்து வருகிறது. இப்போது கிடைக்கும் கடைச் சங்க நூற்பாடல்களில் மற்ற எல்லாப் புலவர் களையும்விட மிகுதியான பாடல்களைப் பாடியவரும், யாரியின் உயிர் நண்பராக வாழ்ந்தவரும், குறிஞ்சித் திணையைப் பாடுவதில் வல்லவரும், மற்றப் புலவர்கள் மிக மதித்துப் பாராட்டும். நன்மதிப்பைப் பெற்றவரு மாகிய, கபிலர் என்னும் பெரும் புலவர் தோன்றிய ஊர் இது என்று தெரியவருகிறது.