பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/255

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூர் 23# அப்பெருமான் பிறந்து பேசத் தெரிந்தவுடனே கவிபாடும் ஆற்றல்உடையவராக இருந்தாராம். தமிழ் நாவலர் சரிதை என்ற நூல் அவர் பச்சிளமையிலே பாடிய பாட்டு ஒன்றைக் காட்டுகிறது. இருப்பைப் பூவைப்பற்றிய பாட்டு அது. இருப்பைப் பூ வாடாமல் இருந்தால் பிடியின் வாயில் வெறும் முளேயாக உள்ள கொம்பைப் போல இருக்குமாம். வாடிவிட்டால் உலர்ந்த இருமீனப் போல ஆகிவிடுமாம். நெட்டிலே இருப்பை வட்ட வான்பூ வாடா தாயின், பீடுடைப் பிடியின் கோடு ஏய்க் கும்மே; வாடிளுே - பைந்தலைப் பரதர் மனதொறும் உணங்கும் செந்தலை இறவின் சீர்ஏய்க் கும்மே. (நெடிய இலையையுடைய இருப்பை மரத்தின் வட்டமாகிய வெள்ளைப் பூவானது வாடாமல் இருந் தால் பெருமையுடைய பெண் யானையின் கொம்பை ஒக்கும்; வாடிவிட்டாலோ பசிய தலையையுடைய வலேயர்களுடைய வீடுதோறும் உலரும் செம்மையான தலையையுடைய இருமீனின் இயல்பை ஒக்கும்.) கவிகள் உவமையில் தம்முடைய சாமர்த்தி யத்தையெல்லாம் காட்டுவார்கள். சங்க காலத்துப் புலவர்களோ இயற்கைப் பொருள்களின் இயல்பை நன்கு அறிந்து பாடுவார்கள். அவர்களுடைய உவமையிலும் அந்த இயற்கையைக் கண்டு மகிழ லாம். கபிலர் இருப்பைப் பூவையும் பிடியின் கொம்பையும் இருமீனே யும் கூர்ந்து கண்டிருக்கிருர் அவற்றைப் பாட்டில் அமைத்துக் காட்டுகிருர்.