பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/256

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 வாருங்கள் பார்க்கலாம் மிக்க இளமையிலேயே இந்தப் பாடலைப் பாடிய தைக் கண்டு வியந்த தமிழுலகம், கபிலர் பிறந்த வுடனே பாட்டுப் பாடிவிட்டார்!’ என்று பாராட்டி யது. கருவிலே கவித் திருவையுடைய அந்தக் கபிலர் இந்தத் திருவாதவூரிலே பிறந்தவர் என்று பழைய திருவிளையாடற் புராணம் சொல்கிறது. நீதிமா மதுாக நீழல் நெட்டில் இருப்பை எள்ளுேர் காதல்கூர் பனுவல் பாடும் கபிலனர் பிறந்த மூதூர் வேதகா யகளுர் வாழும் வியன் திரு வாத ஆரால், (மதுரகம்-இருப்பை. பனுவல்-பாடல்.j கபிலனுர் பிறந்த பழைய ஊர் என்று பாட்டுச் சொல்கிறது. நெடுங்காலமாகவே மக்கள் வாழும் ஊர் என்பது மாத்திரம் அல்ல; நெடுங்காலமாகவே, பாட்டுப் பிறக்கும் வாயுடைய பெருமக்கள் பிறந்த ஊராகவும் இருந்து வருகிறது. இது. "பழைய கபிலரை எல்லோரும் மறந்து விட்டார் களே ! அவர் பெயரை நினைவூட்ட ஏதாவது செய்ய வேண்டாமா?” என்று யாரேனும் நினைத்திருக்கலாம். அந்தக் காலத்தில் வாசகசாலையோ, சங்கமோ, மண்டபமோ கட்டும் நாகரிகம் அவருக்குத் தெரிந் திருக்காது. "இறைவன் கோயிலுக்கு எல்லோரும் தினமும் வந்து வழிபடுகிறர்கள். இங்கே கபிலர் நினைவையூட்டும் எதையாவது அமைக்கலாம்" என்று தோன்றி இந்தக் கிணற்றை வெட்டச் செய்