பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/257

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூர் 233 தனர்போலும் புராணம் கபிலமாமுனிவரை இந்த ஊருக்கு அழைத்து வந்து இந்தத் தீர்த்தத்தை உண் டாக்கச் சொன்னதற்கு, தீர்த்தம் சிறந்ததென்று. யாவரும் நம்பவேண்டும் என்னும் கருத்தே காரணம் போலும் எப்படியோ, திருவாதவூரில் கபிலர் பிறந்த தற்கு இந்தக் கபில தீர்த்தத்தையே ஞாபகச் சின்ன மாக வைத்துக் கொண்டால் யாருக்கும் ஒரு பைசாச் செலவில்லை அல்லவா ? வேதநாயகரை, வாதபுரீசரை, பவனபுரப் பரம இனத் தரிசித்துக் கொண்டேன். கோயிலுக்குள் மணி வாசகப் பெருமானுடைய உற்சவமூர்த்திகள் இரண்டு உள்ளன. ஒரு திருமேனி பழையது; மற்ருென்று புதி யது. பழைய மாணிக்கவாசகர் முழங்காலுக்குமேல் கட்டிய தற்ருடையும் குழைந்த உருவமும் கொண்டு நிற்கிருர். புதியவர் கோவணம் பூண்டு நிமிர்ந்து நிற்கிருர். இருவர் கரத்திலும் திருவாசகச் சுவடி ஒளிர்கிறது. இந்த இரண்டு திருவுருவங்களேயும் தரி சித்துக் கொண்டபோது எனக்குத் திருவதிகையில் கண்ட அப்பர் வடிவங்கள் நினைவுக்கு வந்தன. அங்கும் பழைய அப்பர் முழங்காலுக்கு மேல் ஆடை யணிந்த கோலத்தில் காட்சி தருகிருர். புதிய அப்பர் கோவணமணிந்த கோலத்தில் இருக்கிருர். எதற்காக இப்படிப் புதிய உருவத்தை வடிக்கிறவர்கள் அவர் களுடைய ஆடையைக் குறுக்க வேண்டும்? துறவைப் புறத்தே நன்ருகக் காட்டவேண்டும் என்ற எண்ண மாக இருக்குமோ? பழைய மணிவாசகர் அன்பே, உருவாக நிற்கிருர் என்று எனக்குத் தோன்றியது. பழமையை விரும்பும் பைத்தியக்காரத்தனம் என்று. சொல்லி விடாதீர்கள். நீங்களே திருவதிகைக்கும்