பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/258

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

234 வாருங்கள் பார்க்கலாம் திருவாதவூருக்கும் போய் அங்குள்ள பழைய விக்கிர கங்களையும் புதிய விக்கிரகங்களையும் பார்த்துவிட்டுப் பின்பு உங்கள் கருத்தைச் சொல்லுங்கள். மாணிக்கவாசகப் பெருமான் குதிரை வாங்கி வருவதாகப் பாண்டியனிடம் சொல்லித் திருப்பெருந்: துறைக்குச் சென்று திருப்பணி செய்தார். அதனை யறிந்து பாண்டியன் அவரை வருவித்து ஒறுத்தான். சுந்தரேசக் கடவுள் நரி க ளே ப் பரிகளாக்கிக் கொணர்ந்து கொடுத்தார். மீண்டும் பரிகள் நரிகளா யின. அது கண்டு பாண்டியன் மீண்டும் மாணிக்க. வாசகரைத் தண்டித்தான். அவருடைய பெரு மையைக் காட்டுவதற்காக இறைவன் வையையில் வெள்ளம் வரச்செய்து பிட்டுக்கு மண் சுமந்து பிரம் பால் அடிபட்டான். வந்தி தந்த பிட்டை உண்ட இந்த விளையாடல் மதுரையில் பெரிய விழாவாக நடைபெறுகிறது. ஒவ்வோராண்டும் ஆவணி மாதத் தில் மூல நட்சத்திரத்தன்று இது நிகழும். அந்த விழாவுக்குத் திருவாதவூரிலிருத்து மணிவாசகப் பெரு, மான் எழுந்தருளுவார். நான்கு நாட்கள் அங்கே தங்கியிருப்பார். - மார்கழி மாதம் முதல் பத்து நாள் திருவாதவூரில் திருவெம்பாவை உற்சவம் நடைபெறுகிறது. ஒவ்' வொரு நாளும் மணிவாசகப் பெருமான் எழுந்தருளு, áj直门町。 • சுவாமி கோயில் உட்பிராகாரத்தின் நிருதி மூலே யில் (தென்மேற்கு) மணிவாசகர் சந்நிதி இருக்கிறது. வெளிப் பிராகாரத்தில் தென் பக்கம் ஆரணவல்லியம் பிகையின் கோயில் தனியே இருக்கிறது. வேதநாயகி. என்றும் அப் பெருமாட்டியின் திருநாமம் வழங்கும்.