பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/259

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருவாதவூர் 235 இறைவனைத் தரிசித்துக்கொண்டு ஆரண வல்லியைத் தரிசிக்க எண்ணி இறைவன் கோயிலில் தென்புறமுள்ள வாயில் வழியே வந்தேன். அந்த வாயிலுக்கு மேலே தாழ்வாரப்பத்தி அழகிய சிற்பங் களுடன் திகழ்ந்ததை அண்ணுந்து பார்த்தேன். கலைத்திறம் மலிந்த கம்பமும் நுட்பத் தொழிலின் விளைவாகிய கொடுங்கைகளும் காட்சியளித்தன. அந்தக் கொடுங்கைகளில் சில சிதைந்திருந்தன. "நூற்றுக்கால் மண்டபத்தைத்தான் செப்பஞ் செய்ய வில்லை. இந்தக் கொடுங்கைகளேயாவது செப்பஞ் செய்யக்கூடாதா?’ என்று கேட்டேன். "பதின்மூன்று முழ நீளம் வரையில் கொடுங்கை கள் இருக்கின்றன. சில சிற்பிகளே அழைத்துவந்து காட்டினர்கள். நம்மால் இந்தச் சிதைவைத் திருத்தி: வேறு கொடுங்கை செய்து பூட்ட முடியாது என்று சொல்லி விட்டார்கள்' என்று ஒரு முதியவர் சொன் ஞர். அது உண்மையோ, பொய்யோ தெரியாது. சிதைப்பது எளிது, பொருத்துவது மிக மிக அரிது என்ற உண்மையை நினைத்துக் கொண்டேன். இறைவன் வேதமே நான் என்ற ஒலியைத் திரு. மாலுக்கு உணர்த்தினமையால் வேதநாயகன் என்ற திருநாமத்தை உடையவனுன்ை என்று புராணம் சொல்கிறது. வேத ஒலி எப்போதும் கேட்டுக் கொண் டிருந்த இடம் இது என்பதையே அவ்வாறு புராணக் காரர் சொல்கிருரோ ? $ - "மாணிக்கவாசகர் பிறந்த வீடோ, அந்த விடு: இருந்த இடமோ இப்போது இருக்கிறதா?’ என்று: பட்டரவர்களைக் கேட்டேன். “மாணிக்கவாசகர்"