பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/260

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

236 வாருங்கள் மார்க்கலாம் கோயில் என்று தனியே ஒரு கோயில் உண்டு. அந்த இடத்தில்தான் மாணிக்கவாசகர் பிறந்த வீடு இருந்த தாம்." - : 'அதற்கு என்ன ஆதாரம் ?” ; : "பல காலமாகச் சொல்லிக்கொண்டு வருகிருர் கள். அதுதான் ஆதாரம்.' - கோயிலிலிருந்து தெற்கே இரண்டு பர்லாங்கு தூரத்தில் மாணிக்கவாசகர் கோயில் இருக்கிறது. சாலையின் கீழ்ப்பக்கம் கிழக்கு நோக்கிய சந்நிதியை யுடையதாகச் சிறிய மதிலும் சிறிய விமானமும் உடை .யதாக அது காட்சி அளிக்கிறது. அந்த இடம் முன்பு வெறும் வெளியாகத்தான் இருந்ததாம். மாணிக்க வாசகர் வீடு இருந்த இடம் என்று கர்ண பரம்பரை யாகச் சொல்லிவந்தார்களாம். ஊரில் உள்ளவர்கள் பொருள் திரட்டி அவ்விடத்தில் கோயிலேக் கட்டினர் கள். 1934-ஆம் ஆண்டு இக்கோயில் நிறைவேறிக் கும்பாபிஷேகம் நடைபெற்றது. கர்ப்பக்கிருகத்தில் மாணிக்கவாசகர் திருவுருவம் இருக்கிறது. வெளியில் விநாயகரும் சுப்பிரமணியரும் இருக்கிருர்கள். சில காலம் ஆதிசைவர் பூஜை நடந்துவந்தது. இப் போது வைதிக பூஜை நடந்துவருகிறது. மாணிக்க வாசகர் ஆமாத்தியப் பிராமண குலத்தில் உதித்தவர். பரம்பரை பரம்பரையாக அமைச்சராக இருந் து வ ரு ம் குடும்பம் அது அவருடைய முன்ஞேர்கள் மானமங்கலம் என்ற :ஊரிலிருந்து வந்து குடியேறியவர்கள் என்று தெரிய வருகிறது. . - மன்னும் இக் கேரி தள்ளில் மாளமங் கலத்தா ராகும்