பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/272

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

248 வாருங்கள் பார்க்கலாம் ஆடி மாதம் முடிந்து ஆவணி மாதம் வந்தது. குதிரை வராதது கண்ட பாண்டியன் திருவாத ஆரருக்கு ஒலே போக்கின்ை. அது கண்ட அவர் திருப்பெருந்துறை நாயகனே அணுகி, ‘இனி என் செய்வேன்' என்று இரங்கித் துதித்தார். அப்போது அசரீரியாக இறைவன் பணித்தபடி, விரைவில் குதிரைகள் வந்து சேரும்' என்று ஓர் ஒலே எழுதிப் பாண்டியனுக்கு அனுப்பினர். அன்று இரவில் இறைவன் மாணிக்கவாசகர் கனவில் தோன்றி, 'நாம் குதிரைகளுடன் வருகிருேம். நீ முன்னுல் மதுரை செல்வாயாக' என்று பணித்தான். அவ்வாறே திருவாதவூரடிகள் காலேயில் எழுந்து இறைவனே வணங்கி விடைபெற்று மதுரைக்குச் சென்ருர், சென்று பாண்டியனைக் க ண் ட ர். பாண்டியன் அவரை வரவேற்று, "எவ்வளவு பொன் கொண்டு போனிர்? எவ்வளவு செலவு செய்தீர்? எவ் வளவு குதிரைகள் வாங்கினரீர்?' என்று கேட்டான். "நான் கொண்டு சென்ற பொன்னுக்குக் கணக்கே இல்லை. அப்படியே வரப்போகும் குதிரைகளுக்கும் கணக்கே இராது. இதோ அவை வரப்போகின்றன. நீயே கண்டு பெருமையடையலாம்' எ ன் ரு ர் மாணிக்கவாசகர். - பின்பு அவர் சொக்கநாதன் திருக்கோயில் சென்று வழிபட்டு வீடு சென்று இறைவன் திருவரு ளால் எல்லாம் நன்கு நடைபெறும் என்ற நம்பிக்கை யோடிருந்தார். அன்று குதிரை வரவில்லை. அடுத்த நாள் பாண்டியன் கேட்டபோது, ‘இன்னும் மூன்று நாட் களில் வந்துவிடும்' என்ருர். குதிரைகள் வந்தால்