பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/278

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

254 வாருங்கள் பார்க்கலாம் உள் ளன. பழங்காலக்தில் திருக்கோயில்களில் எழுத்து நிலே மண்டபம் என்றும் எழுதெழிலம்பலம் என்றும் பெயர் பெற்ற சித்திரசாலேகள் இருந்தன வாம். பொற்ருமரைக்குளத்தைச் சுற்றியுள்ள சுவரில் இருந்த ஒவியங்கள் அந்தச் செய்தியை நிஜனப் பூட்டின. - - அறுபத்து நான்கு திருவிளையாடல்களையும் சித் திரத்தில் அங்கே அமைத்திருக்கிருர்கள். மூன்று சுவர்களில் இவற்றைக் காணலாம். இவற்றைத் தீட்டிய காலம் 1894-ஆம் ஆண்டு (ஜயu கார்த்திகைமீ") என்று அந்த ஒவியங்களின் தொடக் கத் தி ல் குறித்திருக்கிருர்கள். அறுபத்திரண்டு ஆண்டுகளுக்கு முன் எழுதியவை அவை. ஆனல் அதற்கு முன்பும் அவ்விடத்தில் ஒவியங்கள் இருந் தன. சுவரில் ஓரிடத்தில் இப்போதுள்ள ஒவியம் சிதைந்து பொக்கையாக இருக்கிறது. அந்த இடத் தல் இந்த ஒவியப் படலத்துக்கும் கீழே உள்ள ஒவியத்தின் பகுதி தெரிகிறது. அதல்ை சுவர் முழுவதுமே பழைய காலத்தில் ஒவியம் இருந்திருக்க வேண்டுமென்று தெரிகிறது. - மாணிக்கவாசகர் அமைச்சர் கோலத்தோடு பெருந்துறை சென்று ஞானதேசிகன வழிபடும் கோலத்தை இந்தச் சுவரோவியத்தில் கண்டு இன் புற்றேன். குதிரை ராவுத்தனுக வந்த இறைவன் கோலத்தைத் தரிசித்தேன். ஒவ்வொரு சித்திரமாக ஆழ்ந்து கவனித்துப் பார்த்தால் நாள் போவது தெரியாது; மாதம் போவ தும் தெரியாது. -