பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/277

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை ஒவியங்கள் 253 குதிரைகளைப் பெற்ற அரசன் மாணிக்க வாசகரைப் போற்றிப் பாராட்டி வழிபட்டான். ஆனல்-? 3 மதுரைக் கோயிலில் மாணிக்கவாசகப் பெருமா னுடைய வரலாற்ருேடு தொடர்புடைய சித்திரங்களும் சிற்பங்களும் எங்கேனும் இருக்கின்றனவா என்று தேடினேன். சொக்கநாதர் கோயிலேச் சுற்றி அறு பத்து நான்கு திருவிளேயாடல்களேயும் சுதைச்சிற்ப மாக அமைத்திருக்கிருர்கள். விஜயநகர அரசர்கள் காலத்துக்கு முன்பே அமைந்தவை அவை என்று சொல்கிறர்கள். அந்தச் சுதைச் சிற்பங்கள் சற்றே சிதைவாக இருப்பினும் மிகவும் கவனமாகக் கோயி லதிகாரிகள் பாதுகாத்து வருகிருர்கள். வண்ணமும் திண்ணமும் உடைய அந்தச் சிற்பங்களில் மாணிக்க வாசகரைக் கண்டேன். குதிரைச் சேவகர் குதிரை களின் இலக்கணங்களே மன்னனுக்கு எடுத்தியம்பும் கோலத்தைக் கண்டேன். அடுத்த பிராகாரத்தில் துவஜஸ்தம்பத்துக் கருகில் உள்ள தூண்களில் கல்லிலே செதுக்கிய அழகுச் சிற்பங்கள் பல உண்டு. அவற்றிலும் மணி வாசகர் கதைப் பகுதிகளைக் கண்டேன். இறைவன் கயிறு மாறிப் பாண்டியனிடம் குதிரைகளை ஒப்பிக்கும் காட்சியை ஒரு சிற்பம் புலப்படுகிறது. பொற்ருமரைக் குளத்தைச் சுற்றியுள்ள தாழ் வாரப் பத்தியில் வண்ண ஒவியங்கள் பல சுவரில்

  • இப்போது இவற்றைச் செப்பஞ் செய்து அமைத்திருக்கிருக்கள்.