பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/276

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

252 வாருங்கள் பார்க்கலாம் செய்து என்பதை. பொருநர் இப்பரியைப் பூசனம் செய்து என்று பிரித்தும் பொருள் கொள்ளலாம். "பொரு நரிப்பரியைப் பூசனம்செய்து என்று பிரித்தும் பொருள் கொள்ளலாம். எதிர்த்து மோதும் நரி களாகிய குதிரைகளைப் பூசை செய்து என்று உண்மையைச் சொல்லும் வகையிலும் இத்தொடர் அமைந்திருக்கிறது. பாண்டியன் அவ்வாறே பூசை செய்து வழிபட, குதிரைப்படைத் தலைவன் சொக்கநாதர் ஆலயத்தை நோக்கிக் கைகுவித்து, வாழ்த்துக் கூறிக் கயிறு மாறிக் குதிரைகளைப் பாண்டியனுக்கு அளித்தான். தான் ஏறி வந்த வேதக் குதிரை ஒன்று தவிர மற்ற எல்லாக் குதிரைகளையும் இவ்வாறு வழங்கப் பாண்டியன் பெற்றுக் கொண்டான். பின்பு பாண்டியன் குதிரைத் தலைவனுக்கும் பிறருக்கும் ஆடை நல்க அவற்றை வாங்கி யாவரும் அணிந்து கொண்டனர். பழைய திருவிளையாடலில் இவ் விடத்தில் ஒரு சுவையான செய்தி வருகிறது. குதிரைப்பாகனக வந்த இறைவனிடம் பாண்டி யன் அழகிய துகில் ஒன்றைப் பரிசாக அளித்தான். இறைவன் அதைக் குதிரையின்மேல் இருந்தவாறே தன் சவுக்கால் வாங்கித் தன் திருமுடிமேல் அணிந்து கொண்டான். பாண்டியன், நாம் கொடுத்ததை மரியாதையின்றிச் சவுக்கினல் வாங்கினனே! என்று கண் சிவந்தபோது, இது குதிரைக்காரர்களுக்கு வழக்கம்' என்று சொல்ல, அரசன் அறிந்து அமைதி பெற்ருனும். -