பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/275

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மதுரை ஒவியங்கள் 251 ஏறினன். பாசத்தை நீக்கும் திருக்கரத்தால் குதிரைப் பாசமாகிய கடிவாளத்தைப் பற்றி யிருந்தான். இந்தக் கோலத்தில் அரசன்முன் வந்து, மன்ன, எங்கள் குதிரையேற்றத்தைச் சிறிதளவு காண்பாயாக!” என்று கூறினன். அண்டமெல்லாம் ஆதார மாகத் தாங்கும் ஆனந்தத் தனிச்சோதி அண்டம் தாங்கும் சண்டமறைப் பரிதனக்கா தார மாகித் தரிக்கஒரு காலத்தும் அசைவி லாத புண்டரிகத் தாள்.அசையப் பாசம் நீக்கும் புனைகரத்தால் பரிபூண்ட பாசம் பற்றிக் கொண்டரசன் எதிர்போந்து மன்ன எங்கள் குதிரையேற் றம் சிறிது காண்டி என்ருர், இவ்வாறு சொல்லிக் குதிரையைப் பல கதியில் விட்டுக் காட்டினன். பிறகு குதிரைகளின் இலக் கணங்களையும் வகைகளையும் எடுத்து விரிவாகச் சொன்னன். எல்லாவற்றையும் கேட்ட மன்னன் அளவில்லாத பேரின் பத்தில் மூழ்கினன். எல்லாம் கூறி முடித்தபிறகு குதிரை வீரனுக வந்த இறைவன், ஈறில்புக ழாய்பொருங் ரிப்பரியைப் பூசனம்செய் திறைஞ்சிப் பாசம், மாறுவரால் என்று கூறினுணும். முடிவில்லாத புகழை யுடைய வனே, வீரர்கள் இந்தக் குதிரைகளைப் பூசை செய்து வணங்கிக் கயிறு மாறுவார்கள் என்று பொருள்படப் பேசின்ை. ஆணுல் அந்தப் பேச்சில் இரண்டு பொருள் உண்டாகும்படி பரஞ்சோதி முனிவர் அமைத்திருக்கிருர். "பொருநரிப்பரியைப் பூசனம்