பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/284

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

258 வாருங்கள் பார்க்கலாம் டனர். எங்கும் ஒரே நரிக் கூட்டம். ஒரே ஊளேயின் ஒலி.மங்கல கீதமும் வாத்திய நாதமும் நிறைந்து விளங்கும் மதுரையில் நரியின் ஊளேயே எங்கும் கேட்டது. கரியின் ஒசையும் பல்இய ஓசையும் கடுங்தேர்ப் பரியின் ஓசையும் இன்றமிழ் ஓசையும் பாணர் வரியின் ஓசையும் கிரம்பிய மணிககர் எங்கும் கரியின் ஒசையாய்க் கிடந்தது விழித்தது ககரம். (கரி-யானே. பல் இயம்-பல வாத்தியங்கள். வரி. பாட்டு மணி - அழகு.) நரிகள் குதிரைகளேக் க டி. த் து க் குதறிய தோடன்றி எதிர்ப்பட்ட பேர்களேயும் கடித்து ஓடின. அவற்றைக் கண்டு மக்கள் ஓடினர் ; ஒதுங்கினர் ; ஒளிந்துகொண்டனர். இரவெல்லாம் இப்படி ஊர் அல்லோலகல்லோலப் பட்டது. - மறுநாள் விடிந்தவுடன் குதிரைப் பந்தியில் இருந்தவர்கள் அரசனிடம் சென்று, இரவு புதிய குதிரைகள் யாவும் நரிகளாக மாறிப் பழைய குதிரை களைக் கடித்து விட்டுச் சென்ற செய்தியை எடுத் துரைத்தார்கள். பாண்டியனுக்குக் க டு ஞ் சி ன ம் உண்டாகிவிட்டது. ‘வாதவூரணுகிய கள்வன் ஏதோ, மாயஞ்செய்து நரிகளேயெல்லாம் குதிரையாக்கிக் கொண்டுவரச் செய்திருக்கிருன். இவ்வாறு செய் தவனே என்னதான் செய்யக்கூடாது ?" என்று கண்ணில் கனல் பிறக்கப் பேசின்ை. அப்போது இரவில் நடந்தது ஒன்றும் அறியாத வராய் மாணிக்கவாசகர் அரசவை நோக்கி வந்தார். அவரைக் கண்டவுடன் பாண்டியன் கடுகடுப்போடு,