பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/285

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் சுமந்த மதுரை 259 "ஏராளமான பணத்தைக் கொண்டுபோய் நல்ல குதிரைகளாக வாங்கி அழகாகக் கொண்டு வந்திரே! உம்மைப்போல அரச காரியத்தைச் செவ்வையாக நிறைவேற்றும் மந்திரி யார் உலகத்தில் இருக்கப் டோகிருர்கள்!' என்று ஏளனமாகக் கேட்டான். "குதிரைகளுக்குக் குற்றம் ஏதேனும் உண்டோ? என்று கேட்டார் மணிவாசகர். - "குற்றம் ஏது ? பாதி ராத்திரியில் எல்லாம் நரி 'யாகி அருகில் இருந்த குதிரைகளைக் கடித்துக் குதறிய தோடு எதிர் வந்தவர்களையும் கடித்து ஊர் கலங்கும் படி செய்து விட்டுக் காட்டுக்கு ஓடிப் போயின. உம் முடைய குதிரைகளின் அழகு தெரிந்ததா ?’ என்று கூறிப்பிறகு, "இவரை அழைத்துப்போய்த் தண்டித்து இங்கிருந்து கொண்டு போன பொருள் முழுவதையும் வாங்குங்கள்' என்று ஏவலாளருக்குக் கட்டளை யிட்டான் பாண்டியன். அவர்கள் அப்படியே மணி வாசகப் பெருமானே அழைத்துச் சென்று வெயிலில் நிறுத்திக் கையிலும் நெற்றியிலும் கல்லே ஏற்றித் தண்டித்தார்கள். மணிவாசகர் இறைவனது மாயத் திருவிளே பாடலை எண்ணி மனம் வாடினுர். தண்டனை தாங்காமல் இறைவனே நோக்கிக் கதறத் தொடங் கினர். - - காதவோ..! காத முடிவிறக்த நாடகஞ்செய் பாதவோ ! பாதகளும் என்னைப் பணிகொண்ட வேதவோ வேத முடிவின் விளைந்ததனிப் போதவே போத கெறிகடந்த பூர்ணவோ ! (திருவிளையாடற்புரா ணம்)