பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/289

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் சுமந்த மதுரை 363. வந்த எனக்குத் தாயாக நின்று என் களேப்பைப் போக்கினயே! இதோ நான் மகிழ்ச்சியுடன் வேலை செய்யப் போகிறேன்’ என்று சொல்லிவிட்டு எழுந் தான். - தந்தையொடு தாய்இன்றித் தனிக்கூலி யாளாக வந்த எனக்கு ஒருதாயாய் அருள்சுரந்து மாருத இந்தஇளைப் பொழித்தனையே! இனிவேலேத் தலைச்சென்றுன் சிங்தைகளிப் பெழவே3ல் செய்வேன் என் றிசைத்தெழுந்தார். ஆளாக வந்த ஆண்டவன், வேலை செய்யும் இடத்துக்குப் போய், "நான் வந்தியின் ஆள்’ என்று சொல்லிப் பதிவு பண்ணிக்கொண்டு கரையடைக்கும் வேலேயைச் செய்யத் தலைப்பட்டான். ஆளுல் ஒழுங்காக வேலே செய்யாமல், மண்ணே வெட்டித் தலைமேல் வைப்பான்; அடடா பாரமாக இருக் கிறதே!” என்று கீழே கொட்டுவான். பிறகு கொஞ்சம் குறைவாக எடுத்துக்கொண்டு போவான். சும்மாடு விழும்படி தட்டுவான். கூடையை இறக்கி வைத்துவிட்டு மறுபடியும் சும்மாட்டைக் கட்டுவான். மீண்டும் மண்ணச் சுமந்து கொண்டுபோய்க் கரை யில் கொட்டுவான். இப்படி ஒரிரண்டு முறை சுமந்து இளேத்துப்போய் அருகில் உள்ள மரத்தடிக்குச் சென்று கூடையையே தலேயணேயாக வைத்துக் கொண்டு படுத்துத் துயில்வான். சிறிது நேரம் துயின்று மீண்டும் கண் விழித்தெழுந்து ஆடுவான்;