பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோணிபுரம் 17 வந்தவர்கள் எல்லோரும் கண்டார்கள். கர்ப்பக் கிருகத்துக்குள் இருக்கும் சுவாமிக்குப் பூஜை செய் வதுதான் வழக்கம். ஆல்ை யாரோ ஒரு பக்தர் இந்தத் துண்ணேச் சுற்றிக் கம்பி கட்டி அதையே ஒரு கோயில் ஆக்கிவிட்டார்; விளக்குப் போட்டார்; தனியே பூஜையை நடத்தினர். முருகன் கம்பத்து இளையவனுகக் காட்சி தரலான்ை. இப்படி ஒரு கதை உண்டு. - திருவண்ணுமலையில் கோயிலுக்குள் இருக்கும் தீர்த்தக் கரையில் கம்பத்து இளேயனர் கோயில் என்று ஒரு சந்நிதி இருக்கிறது. அருணகிரி நாதருக்கு அருள் செய்த பெருமான் திருக்கோயில் அது. ஒரு மண்ட பத்தின் தூணில் முருகன் எழுந்தருளியிருக்கிருன். அந்தத் துண்ணே கர்ப்பக்கிருகமாக ஒரு கோயில் பிறகு எழும்பியிருக்கிறது. அந்த மண்டபத்தைக் கட்டிய போதும், தூணில் உருவத்தை வடித்தபோதும் அங்கே இந்தச் சிறப்பு ஏற்படும் என்று அந்தக் காலத்தில் யாரும் உணர்ந்திருக்க மாட்டார்கள். சிதம்பரத்தில் கோயிலில் ஒரு தூணில் தண்டாயுதபாணி எழுந்தருளியிருக்கிருர். அந்தத் துணே இப்போது தனிச் சந்நிதியாகிவிட்டது. இப்படியே தூணில் உள்ள ஆஞ்சநேயருக்கும், தண்டபாணிக்கும் மகிமை உண்டான இடங்கள் LJöl). - . சீகாழியிலும் இப்படி ஒரு மூர்த்திக்குச் சிறப்பு உண்டாகியிருக்கிறது. அந்தத் தலத்தில் மூலலிங்கத் துக்குப் பிரமபுரீசர் என்று பெயர் அந்தக் கோயிலுக்குப் பிரமபுரீசர் கோயில் என்று நியாய வா. பா - 2