பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வாருங்கள் பார்க்கலாம் மாகப் பெயர் வழங்கவேண்டும். ஆல்ை இப்போது தேவஸ்தானம் யாருடைய பெயரால் நடக்கிறது தெரி யுமோ? சட்டைநாத சுவாமி தேவஸ்தானம் என்ற பெயரில்தான் எல்லாம் நடைபெறுகின்றன. அந்தத் தேவஸ்தானத்தின் தலைமைப் பதவியைச் சட்டை நாதர் தம்முடைய மகிமையில்ை பெற்றர். அவருடைய சக்தியை இப்போதும் பக்தர்கள் பாராட்டிப் புகழ்கிருர்கள்; அவரை வேண்டிக் கொள்கிருர்கள். இந்தச் சட்டை நாதர் உருவம் தோணியப்பர் கோயிலச் சார்ந்த ஒரு மூலையில் இருக்கிறது. கோயிலில் பிரமபுரீசர் சந்நிதிக்குப் பின்னே ஒரு கட்டுமலே இருக்கிறது. அந்த மலையில் தோணிபுரேசர் எழுந்தருளியிருக்கிருர். உமாபாகர், பெரிய நாயகர் என்று அப்பெருமானுக்குப் பெயர்கள் வழங்கும். கைலாயத்திலிருந்து பெயர்ந்து வந்த சிகரம் ஒன்று இந்தத் தலத்தில் விழுந்தது என்றும், அந்தச் சிகரம் சில காலத்தில் மறைந்து போக, அதன் அறிகுறியாக இந்தக் கட்டுமலையை ஒரு மன்னன் கட்டினுன் என்றும் தலபுராணம் தெரிவிக்கிறது. கைலாசச் சிகரத்தை இருபது பறவைகள் ஏந்தி வந்தனவாம். பிரளய காலத்தில் உலகமெல்லாம் நீரில் மூழ்கி விட்டது. உயிர்கள் யாவும் இறைவனுடைய திருவடியில் ஒன்றி நின்றன. மறுபடியும் உலகத்தைப் படைக்கச் சிவபெருமான் திருவுள்ளம் கொண்டான். பிரணவத்தைத் தோணியாகக் கொண்டு அத் -தோணியில் உமாதேவியாருடன் தானும் ஏறிச்