பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/31

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோணிபுரம் 19 செலுத்திக்கொண்டு வந்தான். நாகப் பணியும், பிறையும், கொன்றை மாலேயும், புலித் தோலாடையும் இன்றி அறுபத்து நான்கு கலைகளேயே ஆடையாகப் புனைந்து பெரிய திருவுருவத்துடன் தோணியில் எழுந்தருளி வந்தான். கஞ்சுமிழ் உாகப் பூணும் ககைகிலாக் கொழுந்தும் வாசப் பைஞ்சுடர் இதழித் தாரும் பாய்.லி அதரும் இன்றி மஞ்சுறழ் கருமென் கூந்தல் மாதொடு மருவி எண்ணெண் துஞ்சருங் கலைகள் என்னும் துலங்குபொற் கலைகள் தாங்கி* வந்தானென்று சீகாழிப்புராணம் சொல்கிறது. சிவபெருமான் அப்படி வரும்போது இந்தத் தலத்தைக் கண்டான். இது பிரளய நீரில் மிதந்து நின்றது. இதுவே மூலாதார கூேடித்திரம் என்று அருளிச்செய்து இங்கே தோணியுடன் நிலையாக எழுந்தருளினுன். - இந்தத் தோணிபுரக் கோயிலே மலேயென்றும்; திருத் தோணிமலையென்றும் வழங்குகிருர்கள். இதற்குப் போக மேலைப் பிராகாரத்திலும் வடக்குப் பிராகாரத்திலும் படிக்கட்டுகள் இருக்கின்றன. இந்தக் கோயிலைச் சுற்றிப் பல பழஞ் சிற்பங்கள் சுதையால்

  • உரகப்பூண்-பாம்பாகிய ஆபரணம். நகை-ஒளி. இதழித் தார்.கொன்றை மால். புலி அதள்-புலித் தோல். மஞ்சு உறழ். மேகத்தை ஒத்த துஞ்சரும் கல்கள்-அழியாத கல்ம்கள். பொற் கன்கள்.பொன்குடைகனை.