பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மண் சுமந்த மதுரை 267 கொண்டவன் முதுகில் அடித்தான். அந்தக் கணத் தில் மண்ணே உடைப்பிலே கொட்டிக் கூடையை யும் போட்டுவிட்டு இறைவன் மறைந்தான். பாண்டியன் அடித்த அடி பாண்டியனது முதுகிலே பட்டது; அவன் மனேவிமார் உடம்பிலே பட்டது ; அமைச்சர் மேனியிலும் அரசிளங்குமரர் மேலும் வீரர்கள் மேலும் பட்டது. யானேயின் மேலும் குதிரையின் மேலும் பட்டது. சூரிய சந்திரர் களுக்கும் மற்றக் கிரகங்களுக்கும் நட்சத்திரங்களுக் கும் ஐம்பூதங்களுக்கும் அடி விழுந்தது. வேதமும் ஆறு சமயக் கடவுளரும் தேவரும் முனிவரும் மதுரை நாயகன்மேல்பட்ட அடியைப் பெற்றனர். சராசரங் கள் எல்லாவற்றின் மேலும் பட்டது அந்த அடி. கருவில் இருந்த குழந்தை மேற்பட்டது : உயிர் இல்லாத ஒவியத்தின் மேலும் பட்டது. ஒரு கூடை மண் கொட்டியதும் உடைப்பு அடைந்துவிட, ஆள் மறைந்ததை உணர்ந்த ஏவலாளர் வந்தியிடம் போஞர்கள். அப்போது வந்தி, நம்முடைய ஆள் என்ன செய்தானே ?” என்று மதுரை நாயகனே நோக்கி இரங்கி நின்ருள் அந்தச் சமயத்தில் சிவ கணங்கள் விமானத்தோடு வந்து அவளே அழைத்துச் சென்றனர், - எல்லோரும், "அடி என்மேல்பட்டது, என்மேல் பட்டது' என்று ஒருவருக்கொருவர் சொல்லிக் கொண்டு நின்ருர்கள். அப்போது அசரீரியாக இறைவன் யாவரும் கேட்கும்படியாகக் கூறலான்ை: "பாண்டிய மன்னனே, உன்னுடைய செல்வம் அற நெறியில் ஈட்டியதாதலின் புனிதமானது. அதனுல்