பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/298

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பெருந்துறை திருவாசகத்தைப் படிப்பவர்களுக்குத் தொட்ட இடமெல்லாம் திருப்பெருந்துறை வருவது தெரிந்: தி ரு க் கு ம். திருவாதவூரரை மாணிக்கவாசகர் ஆக்கியது அந்தத் தலம், இன்பம் பெருக்கி இருள் அகற்றி எஞ்ஞான்றும் துன்பம் தொடர்வறுத்துச் சோதியான்-அன்பமைத்துச் ॐ शृfrां பெருந்துறையான் - என்னுடைய சிந்தையே ஊராகக் கொண்டான் உவந்து என்று மாணிக்கவாசகர் பாடுகிருர், திருப்பெருந்துறை எங்கே இரு க் கி ற து? ஈரோட்டுக்கு அருகில் பெருந்துறை என்ற ஊர் இருக் கிறது. அது திருப்பெருந்துறை அன்று. திருப் பெருந்துறை என்ற பெயரைச் சொல்லிக்கொண்டு போளுல் அந்தத் தலம் இருக்கும் இடம் தெரியாது. ஆவுடையார் கோயில் என்ருல்தான் இந்தக் காலத் தில் எல்லோருக்கும் தெரியும். கோயில் கணக்கில் ஆளுடையார் கோயில் என்று பதிவாகிறது. திருவாசகத்திலோ திருப்பெருந்துறை, சிவபுரம் என்று பெயர் பெற்றிருக்கிறது. தேவாரம், புராணம் ஆகியவற்றைப் புரட்டிப் பார்த்தால், 'இதுதான் ஆதிகைலாசம், இதுவே குருந்தவனம், சதுர்வேத