பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/300

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

274 - வாருங்கள் பார்க்கலாம் களின் உயர் பண்பும் தெரிய வருகின்றன. கண்டறி யாதன வெல்லாம் கண்டு வியப்படைகின்ருேம். அந்தச் சங்கநூற் கருவூலத்தைச் சில காலம் தமிழ் நாடு மறந்திருந்தது. அவை இருக்குமிடம் தெரியாமல் காண்பாரின்றி மறைந்திருந்தன. அவற்றை மீண்டும் க்ண்டெடுத்துத் துப்புத் துலக்கி வெளியிட்ட பெரிய வரை இன்று தமிழகம் கொண்டாடிப் போற்றுகிறது. மகாமகோபாத்தியாய டாக்டர் உ. வே. சாமிநாத ஐயரவர்களுடைய பேருழைப்பிலுைம் ஆராய்ச்சித் திறத்தாலும் இன்று தமிழ்த்தாய் புதைந்திருந்த அணி களேயெல்லாம் அணிந்து களிநடம் புரிந்து விளங்கு கிருள். அந்தப் பெரும் பேராசிரியரைத் தமிழ்த் தொட்டிலில் வளர்த்துத் தமிழ்ப்பால் புகட்டிய திருக் கோயில் திருவாவடுதுறை யாதீனம். ஐயரவர்கள் பல நூல்களில் அந்த ஆதீனத்தைப் பர்ராட்டி எழுதி யிருக்கிருர்கள். அவர்களுடைய குருவாகிய மகா வித்துவான் மீனுட்சிசுந்தரம் பி ள் ளே ய வ ர்கள் திருவாவடுதுறை யாதீனத்தில் வி த் து வா ைக விளங்கியவர்கள். நன்னூலின் உரை, சிவஞானபோத பாஷ்யம், காஞ்சிப் புராணம் முதலிய நூல்களே இயற்றிய சிவஞான முனிவரும், விநாயக புராணம் முதலியவற்றை இயற்றிய கச்சியப்ப முனிவரும் அவ்வாதீனத்தைச் சார் ந் த வ ர் க ளே. தமிழ் வரலாற்றில் திருவாவடுதுறை யாதீனத்துக்கு ஒரு சிறந்த இடம் உண்டு. - அத்தகைய ஆதீனத்தைச் சார்ந்த திருக்கோயில் ஆவுடையார் கோயில். அக்கோயிலுக்குச் சென்று தரிசிக்கவும் படம் எடுக்கவும் அன்பர்களுக்கு அதைப் பற்றிச் சொல்லவும் வேண்டுமென்று எண்ணிய