பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/303

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பெருந்துறை 277 திருவாவடுதுறையிலிருந்து ஆவுடை யார் கோயில் 130 மைல் தூரத்தில் இருக்கிறது. நான் என் போக்கில் போயிருந்தால் மறுநாள் ஞாயிற்றுக் கிழமைதான் அங்கே போயிருக்க முடியும். ஆதீனத் தலைவர்கள் உடன் இரண்டு ஒதுவார்களேயும் அழைத்துக்கொண்டு பெரிய காரில் புறப்பட்டார்கள். திருப்பெருந்துறை யாத்திரை இவ்வளவு சிறப் பாக நிறைவேறுமென்று நான் எண்ணவே இல்லை. திருவாவடுதுறையிலிருந்து புறப்பட்டு எழுபத்தைந்து மைலில் அக்கிணியாற்றங் கரையில் உள்ள எடுத் தணி வயல் என்ற இடத்தில் சிறிது தங்கிைேம். ஆதீனத்துக் கிராமம் அது. அங்கே காடும் வயலும் கலந்திருந்தன. இப்போது காடு திருத்தி நாடாக்கித் தொழிலாளர்களுக்கு வேண்டிய வசதிகளையும் வீடு களையும் கட்டிக் கொடுத்திருக்கிருர்கள். முதல் காரியமாக ரீ பஞ்சாட்சர விநாயகர் என் மூர்த்தியைப் பிரதிஷ்டை செய்து ஒரு கோயிலக் கட்டியிருக்கிருர்கள். அந்தக் கோயிலைத் தரிசித்துக் கொண்ட்ேன். விநாயகப் பெருமானே, திருப்பெருந் துறையில் நான் நினைத்த காரியம் செவ்வையாக நிறைவேற வேண்டும்' என்று பிரார்த்தனே செய்து கொண்டேன். 3 * பிறகு அங்கிருந்து புறப்பட்டு ஆவுடையார் கோயிலை அடைந்தோம். அப்போது மாலே ஏழு மணி. திருக்கோயில் சென்று சுவாமி தரிசனம் செய்து கொண்டோம். ஆலய நிர்வாகிகளிடம், எனக்கு வேண்டிய உதவிகளைச் செய்யும்படி மகாசந்நிதானம் அவர்கள் உத்தரவிட்டு விட்டுத் திருவாவடு துறையை நோக்கிப் புறப்பட்டார்கள். -