பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/302

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

27 வாருங்கள் பார்க்கலாம் சிரப்பால் மணிமவுலிச் சேரமான் தன்னச் சுரப்பாடு யான்கேட்கப் பொன் ஆடொன்று ஈந்தான் இரப்பவர் என்பெறினும் கொள்வர் ; கொடுப்பவர் தாம்அறிவர் தம்கொடையின் சீர். இதுதான் எனக்குத் திருவாவடுதுறையில் நினை வுக்கு வந்தது. இதைப் பல அன்பர்களிடம் சொல்லி என் வியப்பை வெளிப்படுத்தினேன். - என்ன நடந்ததென்று இன்னும் சொல்ல வில்லையே..! போய்ச் சாப்பிட்டு வாருங்கள்!” என்று தலைவரவர்கள் அன்புடன் சொன்னர்கள். உணவு உட்கொண்டு வந்தவுடன், “நாமே ஆவுடையார் கோயிலுக்கு வருவதாக இருக்கிருேம்' என்ருர்கள். அதைக் கேட்டவுடன் நான் வியப்பில் மூழ்கினேன், "ஒவ்வொரு குருவாரமும் ஆவுடையார் கோயிலுக்குப் போய்த் தரிசனம் செய்து வருவது வழக்கம். இந்த வாரம் போகவில்லை. இப்போது ஒரு சந்தர்ப்பம் கிடைத்திருக்கிறது" என்று அவர்கள் சொன்னபோது அவர்கள் பெருந்தன்மையே எனக்குப் புலஞயிற்று. அன்று சனிக்கிழமை. வியாழக்கிழமையன்று போகர் விட்டால் வெள்ளிக்கிழமை போவார்களென்றும் இல்லையானல் திங்கட்கிழமை போவார்களென்றும் பிறகு தெரிந்து கொண்டேன். அன்று அவர்கள் புறப்பட்ட்து, சேரன் காட்டிய வண்மையோடு சேர்ப் பதற்குரியது என்பதை நான் தெளிவாக உணர்ந்து கொண்டேன். - -