பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/306

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

280 வாருங்கள் பார்க்கலாம் துறைக்கு வாருங்கள், நம்பியார் நேரே செய்த காரியத்தை நான், எழுத்தின் வாயிலாகச் செய்து பார்க்கிறேன். தத் 3 முதல் முதலில் மற்றக் கோயில்களுக்கும் இந்தக் கோயிலுக்கும் உள்ள பெரிய வேறுபாடு ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். இந்தக் கோயிலில் சுவாமியே இல்லை ! அதாவது சுவாமிக்கு உருவமே இல்லை. கடவுளுக்கு உருவம், அருவுருவம், அருவம் என்ற மூன்று நிலைகள் உண்டு. நடராஜர், சந்திர சேகரர், இடபாருடர் என்ற கோலங்களெல்லாம் உருவத் திருமேனிகள். சிவலிங்கம் அருவுருவம்; கை கால் முதலிய அங்கங்கள் இல்லாமையால் உருவ முடையது என்று சொல்ல இயலாது ; கண்ணுல் பார்க்க முடிவதால் அருவம் என்றும் சொல்லக் கூடாது ; ஆதலால் அதை அருவுருவம் என்று சொல்வது வழக்கம். அருவம் என்பது சூன்யம். சிதம்பரத்தில் உருவமாகிய நடராஜ மூர்த்தியும் அருவமாகிய இ ர க சி ய மு. ம் அருவுருவமாகிய மூலட்டானேசுவரரும் விளங்குவதைக் காணலாம். ஆவுடையார் கோயிலில் கருப்பக் கிருகத்தில் லிங்கம் இல்லே. இங்குள்ள சுவாமி ஆத்மநாதர். அவர் அருவமாக, உருவமற்றவராக விளங்குகிருர். அவ்விடத்தில் வெறும் பீடம் மாத்திரம் இருக்கிறது. அதற்கே அபிஷேக ஆராதனைகள் நடைபெறுகின் றன. மேலே குவளை சாத்தி அலங்காரம் செய் கிருர்கள். சிவலிங்கத்தின் கீழே பீடமாக இருக்கும் பகுதிக்கு ஆவுடையார் என்று பெயர். இங்கே