பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/307

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பெருந்துறை 281 லிங்கம் இன்றி ஆவுடையார் மாத்திரம் இருப்பதால் இதை ஆவுடையார் கோயில் என்று வழங்குவதாக ஒரு காரணம் சொல்லுவதுண்டு. திருக்கோயிலுத்கு முன்பு ஒரு பெரிய தீர்த்தம் இருக்கிறது. அதை நெல்லியடியென்று மக்கள் வழங்குகின்றனர். முன்பு இதைச் சுற்றி நெல்லி மரங்கள் அடர்ந்திருக்க் வேண்டும். இப்போதும் சில மரங்கள் இருக்கின்றன. ஒரு வருஷத்துக்கு முன் அடித்த புயலால் இந்தப் பக்கங்களில் சேதம் ஏற்பட்டதை யாவரும் அறிவார்கள். அப்போது வீடு களும் மரங்களும் பயிர்களும் அழிந்தன. ஊரே வெள்ளக்காடாகி விட்டது. அந்த வெள்ளத்தில் ஊர் மக்கள் யாவரும் ஆத்மநாத சுவாமி திருக்கோயி லேயே புகலிடமாகக் கொண்டார்கள். பிறவிக் கடலி னின்றும் பிழைத்து ஏறக் கோயிலேக் கட்டி யிருக் கிருர்கள் முந்தையோர். அது புயலால் உண்டான வெள்ளத்தினின்றுங்கூட மக்களைக் காப்பாற்றியது புயல் நெல்லியடிக் குளத்தையும் பதம் பார்த் திருக்கிறது. அதன் வடக்ரையிலுள்ள கற்களெல் லாம் சிதைந்து சாய்ந்துவிட்டன. நெல்லியடியைத் தேவ தீர்த்தம் என்று பெயரிட்டுப் போற்றுகிறது புராணம். திருத்கோயில் தெற்குப் பார்த்தது. இங்கே சிவ பெருமான் குருமூர்த்தமாக எழுந்தருளி யிருக்கிருன். மாணிக்கவாசகருக்குக் குருவாக உபதேசம் செய்த வனும் அவனே. குருமூர்த்தி தென்முகம் நோக்கி இருத்தல் ஒரு மரபு. தட்சினமூர்த்தி தெற்கு நோக்கிய பெருமான் அல்லவா? ஆகவே இந்தக்