பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/308

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

232 வாருங்கள் பார்க்கலாம் கோயில் தெற்கு முகமான சந்நிதியை உடையதாக விளங்குகிறது. - தேவதீர்த்தத்தில் நீராடிவிட்டு உடனே கரைக்கு வந்தால், கிழக்கு நோக்கி வல்லப கணபதி எழுந் தருளியிருக்கிறதைப் பார்க்கலாம். ஐந்து கரத்தன் என்று கணபதியைச் சொல்வார்கள். வல்லபையோடு எழுந்தருளியிருக்கும்போது அவருக்கு மகிழ்ச்சி அதி கம் அல்லவா? தனியாக இருக்கும் போது அஞ்சு கரத்தால் அருளே வழங்கும் விநாயகர் இப்போது இரட்டிப்புப்பங்கு அருளேத் தரப் பத்துக் கைகளுடன் வீற்றிருக்கிருர். இனிமேல் நாம் கோயிலுக்குள் போகலாமா ?. இந்தக் கோயிலில் மிகவும் அற்புதமான சிற்பங்கள் இருக்கின்றன. அழகான மண்டபங்கள் இருக்கின் றன. மண்டபங்களின் கூரையை அசப்பிலே பார்த் தால் மரவேலையைப் போலத் தோன்றும். கல்லில் செதுக்கிய சிற்பம் அது. பழைய காலத்தில் சிற்பி களிடத்தில் ஒரு வழக்கம் உண்டாம். யாராவது கோயில் கட்டச் சொல்லி ஒப்பந்தம் செய்து கொண் டால், எப்படி வேண்டுமானலும் கட்டித்தருவோம்; எந்தவிதமான சிற்பங்களே அமைக்கச் சொன்னலும் அமைத்துத் தருவோம் ; ஆனல்- என்று சில விலக்குகளைச் சொல்வார்களாம். தாரமங்கலம் தூண், திருவலஞ்சுழிப் பலகணி, ஆவுடையார் கோயில் கொடுங்கை ஆகியவற்றைத்தவிர மற்ற எந்த மாதிரி வேலைப்பாடு வேண்டுமானுலும் செய்து தருகி ருேம் என்று எழுதுவார்களாம். அப்படி எழுதிய நிபந்தனை எங்கேயாவது இருக்கிறதா?’ என்று கேட்