பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/309

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பெருந்துறை - 283 காதீர்கள். இங்குள்ள சிற்ப வேலைப்பாடு அருமை யானது என்பதை இந்தச் செய்தி புலப்படுத்துகிறது. என்பதற்காகச் சொன்னேன். ஆதலின் நாம், இப்போது சுவாமி இல்லாத சூனியத்தைப் பார்க்கப் போகிருேம் என்று எண்ணி விடாதீர்கள். எத்தனை மாசமானுலும் சலிப்பின்றிக் க்ண்டு கண்டு களிக்கும் சிற்ப மாளிகைக்குள்ளே போகப் போகிருேம், மனத்தை உரு க் கும் திருவாசகத்தைப் பாடிய பெருமான் அருள் பெற்ற இடத்துக்குள்ளே அடிவைக்கப் போகிருேம். கல்லும் கரையும்படியாக உருகி இறைவன் அருளுக்காக் ஏங்கி நின்று இறைவன் திருவருள் இன்பத்தை நுகர்ந்த மாணிக்கவாசரைத் தரிசிக்கப் போகிருேம் அ வ ரு க் கா. க க் குதிரைச் சேவகராக எழுந்: தருளிய பெருமானே வழிபடப் போகிருேம். அருவ மாக எழுந்தருளி யிருக்கும் ஆத்மநாதரும் சிவலோக நாயகியும் பூசிக்கப்பெறும் பீடங்களைத் தரிசனம் செய்யப்போகிருேம். - இதோ பார்த்தீர்களா? நாம் இன்னும் கோயிலுக் குள் நுழையக்கூட இல்லே. பிற்காலத்தில் அன்பர்கள் கோயிலுக்கு வெளியே போட்ட கொட்டகையில் நிற் கிருேம். நம் முன்னே தோன்றுகிற மண்டபத்துக்குப் பெரிய மண்டபம் என்று பெயராம். மக்கள் இதை ஆயிரக்கால் மண்டபம் என்று சொல்கிருர்கள். முன்னலே உள்ள தூண்கள் எத்தனை என்று தெரி கின்றனவா? சரியாக ஏழு தூண்கள்.மேற்குப் பக்கம் நாலு தூண்கள்; கிழக்கே மூன்று. ஒவ்வொரு தூணிலும் ஒவ்வொரு மூர்த்தியைத் தரிசிக்கிருேம்.