பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/310

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

284 வாருங்கள் பார்க்கலாம் இதோ முதல் தூணில் உக்கிர நரசிம்மர் எழுந் தருளியிருக்கிருர். இரணியனுடைய குடலைப் பிடுங்கி மாலையாகப் போட்டிருக்கிருர். சிற்பி எவ்வளவு அழகாக வடித்திருக்கிருன்! இரணியன் குடலே நரசிம்மர் பறித்து மாலேயாக்கினர். அந்தக் குடலின் ஒரு பகுதியை நம்மவர்கள் பிறித்துக் கொண்டார்கள்! அதோ மேல் பக்கம் குடலின் ஒரு பகுதி உடைந்திருக் கிறது தெரிகிறதல்லவா? பிரகலாதன் கீழே ஒதுங்கிய படி நிற்கிருன். - - இதற்கு அடுத்தபடி உள்ள இரண்டு துரண்களே யும் ஒன்ருகப் பார்க்க வேண்டும். இரண்டாவது தூணில் காளிதேவியைப் பார்க்கிருேம். மூன்ருவது தூணில் ஊர்த்துவ தாண்ட வ மூர்த்தி நிற்கிருர் இறைவனுடன் வாதாடித் தோற்ற நிலையில் காளி காட்சியளிக்கிருள். வாடிய மு. க மு. ம், ஒன்றும் பயனில்லையென்று கையைச் சேர்த்துமறித்த பாவமும் எவ்வளவு நுட்பமாக அமைந்திருக்கின்றன! கடை வாயில் இரண்டு பற்கள் இல்லாமல் இருந்தால் காளி யென்றே சொல்லத் தோன்ருது. - - - காளிக்கு ஒரு கும்பிடு போடுங்கள். அவளே நாணச் செய்த பெருமானேக் காணுங்கள். கம்பீரமாக வானே முட்டத் தூக்கிய திருத்தாளுடன் நிற்கிருர். அவர் அடிக் கீழ் எலும்பு தோன்ற நிற்கும் உருவம் ஒன்று இருக் கி றது. காரைக்காலம்மையாரைப் பற்றிக் கேள்வியுற்றிருப்பீர்களே. அறவா நீ ஆடும் போது நின் அடிக்கீழ் இருக்க வேண்டும்" என்று விண்ணப்பித்துக்கொண்ட பெருமாட்டியாரைச் சிற்பி மறக்காமல் கொண்டுவந்து நிறுத்தியிருக்கிருன். நான்காவது தூணில் பிட்சாடனர் இருக்கிருர்.