பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/311

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

திருப்பெருந்துறை 235 அப்புறம் மண்டபத்துக்குள் நுழையும் வாசல்; அதற்கு மறுபுறம் கிழக்கே உள்ள மூன்று தூண்களே யும் தரிசிக்க வேண்டர்மா? இதோ இந்த வரிசையில் ஐந்தாவது தூணில் முருகன் எழுந்தருளியிருக்கிருன்; கோதண்டபாணியாக இருக்கிருன். தன் கையில் வில்லை ஏந்திக்கொண்டு ஒரு காலே மயிலின்மேல் தூக்கி வைத்த திருக்கோலத்தில் காட்சியளிக்கிருன். என்ன அழகு! தனுர்த்தர சுப்பிரமணியர் என்று வழங். கும் இந்தக் கோலம் சில இடங்களில்தான் இருக்கின் றது. முருகன் கேர்தண்டமேந்தும் அவசரமும் உண்டு. திருமுருகாற்றுப்படையில், வானேர் வணங்குவில் தானத் தலைவ! என்று நக்கீரர் முருகனைப் போற்றுகிருர். அருணகிரி நாதர், சூலம்வாள் தண்டுசெஞ் சேவல் கோதண்டமும் சூடுதோளும் தடங் திருமார்பும் உடைய முருகனே வாழ்த்துகிருர். வேறு ஒர் இடத்தில், பணிக்க லாபமும் வேலோடு சேவலும் . வடிக்கொள் சூலமும் வாள்வீசு நீள்சிலை படைத்த வாகையும் உடைய திருக்கோலத்தை நினைக்கிருர். நீள் சிலே என்று கோதண்டத்தைச் சொல்கிருர். வள்ளியெம் பெருமாட்டியை மணந்துகொள்ள வேண்டுமென்று, நாரத முனிவர் கூறிய அடை யாளத்தை வைத்துக்கொண்டு, வேட உருவத்தில் முருகன் செல்கிருன். அப்போது அவன் வில்லைப் பிடித்துக்கொண்டு சென்ரும்ை.