பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/312

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

286 வாருங்கள் பார்க்கலாம் வேடுவர் புனத்தில்உரு மாறிமுனி சொற்படி வியாகுல மன்த்தினெடு போம்விற் காரனும் என்று திருவகுப்பில் அவர் பாடுகிருர் அந்தப் புகழை ஏற்றுக்கொண்ட வில் முருகனே, கோதண்டபாணியாம் குமரனத் தரிசித்துக் கொள் ளுங்கள். அதோ அடுத்தபடி இடபாருடர் நிற்கிருர், கீழே அம்பலவாணர் என்று. கல்லிலே பெயர் பொறித் திருக்கிறது. இடப வாகனத்துக்கு அருகில் நிற்கும் இந்தக்கோலமுள்ள மூர்த்தியைரிஷபாருடர் என்பது மரபு. அடுத்தபடி பார்க்கிற மூர்த்தி, ஒருவரில் இரு வராம் பெருமான்; சங்கர நாராயணர் வலப் பக்கத். தில் சிவக் கோல்ம்; இடப் பக்கத்தில் மால்கோலம். இடக்கையில் உள்ள சங்கும், அந்தப் பகுதியில் உடுத்த பீதாம்பரமும் அது திருமாலின் பாகம் என்று புலப்படுத்துகின்றன. இவர்களே ச் சி. ற் பக் கலை வல்லவர்கள் தனியே அமைக்க வில்லை, அருகில் தொண்டர்களையும் கொண்டுவந்து நிறுத்தியிருக் கிருர்கள். படத்தில் எல்லோரையும் காண இயலாது தான். ஆயினும் கண்ட அளவில் எத்தனை அழகாக வும் வியப்பூட்டுவனவாகவும் காட்சியளிக்கின்றன அந்தத் திருவுருவங்கள்!