பக்கம்:வாருங்கள் பார்க்கலாம்.pdf/313

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பெருந்துறைக் காட்சிகள் ஆவுடையார் கோயிலில் மாணிக்கவாசகருக் குத்தான் எல்லாச் சிறப்பும். அங்கே ஆத்மநாத சுவாமி என்பது சிவபெருமான் திருநாமம். சிவயோக நாயகி என்பது அம்பிகையின் திருநாமம். அம்மை, அப்பன் இரண்டு பேரையும் வெறும் பீடத்தில் ஆவாகனம் பண்ணிப் பூஜை செய்து வருகிருர்கள். இங்கே அம்பிகை யோகபீடத்தில் அருபியாகத் தவம் செய்துகொண்டு விளங்குகிருள். அந்தத் தவத் துக்குக் காவலாக வீரபத்திரக் கடவுள் எழுந்தருளி யிருக்கிருர். அவரைப் பின்னலே பார்க்கப் போகி ருேம். ஆளுல் கோயில் வாசலில் தூண்களில் உள்ள மூர்த்திகளைத் தரிசித்துக் கொண்டபிறகு உள்ளே நுழைந்தால் இருமருங்கும் சுவாமி சந்நிதியை நோக்கி இரண்டு வேறு வீரபத்திரர் திருவுருவங்களைக் காண லாம். ஒரு பக்கத்தில் தக்கனேக் குத்துகிறவர் மாதிரி யும் மற்ருெரு புறத்தில் தக்கன் தலையை அறுக்கிறவர் மாதிரியும் வீரபத்திரர் கோலங் கொண்டிருக்கிருர். இரண்டு திருவுருவங்களிலும் வீரமும் கோபமும் நன்ருக வெளிப்படுகின்றன. பிரம்மாண்டமான உருவங்கள். இந்த மூர்த்திகளுக்கு ஒரு கும்பிடு போட்டுவிட்டு மெல்ல நகர்ந்தோமானுல் மாணிக்க வாசகருடைய ஆலயத்தின் சந்நிதியில் நிற்போம். அங்கே உள்ள மண்டபத்தைத்தான் பெரிய மண்ட பம் என்று சொல்லுவார்கள். ஒரு தூணில் ரகுநாத பூபால மண்டபம் என்ற பெயர் வரையப்பட்டிருக்